சிக்கியது நோக்கியா 10; சிதறப்போகும் சாம்சங்-ஆப்பிள்.!

|

வரவிருக்கும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்வில், நோக்கியா பிராண்ட் கருவிகளை உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது அதன் பல நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் அனுதினமும் நோக்கியா 6 (2018) உலகளாவிய சந்தை மாறுபாடு, நோக்கியா 7 பிளஸ், நோக்கியா 9, மற்றும் நோக்கியா 3310 (4ஜி) போன்ற கருவிகளின் லீக்ஸ் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

சிக்கியது நோக்கியா 10; சிதறப்போகும் சாம்சங்-ஆப்பிள்.!

அந்த பட்டியலில் புதிதாக இணைந்துள்ள ஒரு நம்பமுடியாத ஸ்மார்ட்போன் தான் 5 பின்பக்க கேமரா கொண்ட நோக்கியா 10. நேற்றுவரை 5 கேமராக்கள் கொண்டிருக்கும் நோக்கியா ஸ்மார்ட்போன் என்றே அறியப்பட்ட இக்கருவி இன்று நோக்கியா 10 என்ற பெயரை சுமந்து வெளிவந்துள்ளது.

மொத்தம் 5 கேமரா

மொத்தம் 5 கேமரா

முன்னர் வெளியானதொரு தகவலின்படி, எச்எம்டி க்ளோபல் பணியாற்றி வரும் ஒரு நோக்கியா பிராண்ட் ஸ்மார்ட்போனில் கற்பனைக்கு எட்டாத வண்ணம் பென்டா-லென்ஸ் (5-லென்ஸ்) பின்புற கேமரா அம்சம் இடம்பெறும் என்று அறியப்பட்டது. அதாவது பின்புறத்தில் இடம்பெறும் பென்டா-லென்ஸ் ஆனது பெரிய வட்ட வடிவில், 2 எல்இடி பிளாஷ்களுடன் மொத்தம் 5 கேமராக்களாக உட்பொதிக்கப்டும்

ஸ்கெட்ச் வெளியாகியுள்ளது

ஸ்கெட்ச் வெளியாகியுள்ளது

பெரிய வட்ட வடிவம் என்ற கூற்று உள்ளதால் அது முந்தைய லுமியா 1020-ல் காணப்படும் வட்ட வளையம் போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கலாம் மற்றும் நோக்கியா ஓஸோ விஆர் (OZO VR) கேமராவிலிருந்தும் சில வடிவமைப்பு கூறுகளை எடுத்துக்கொள்ளலாமென எதிர்பார்க்கப்பட்ட நிலைப்பாட்டில் கூறப்படும் நோக்கியா 10 ஸ்மார்ட்போனின் ஸ்கெட்ச் வெளியாகியுள்ளது.

கூறப்படாத ஒரு விடயம்

கூறப்படாத ஒரு விடயம்

வெளியாகியுள்ள ஸ்கெட்ச் ஆனது கூறப்படும் நோக்கியா 10-ன் பின்புறத்தை காட்சிப்படுத்துகிறது. முன்னர் வெளியான தகவலின்படியே இந்த ஸ்கெட்ச் ஆனதும் தொலைபேசியின் பென்டா கேமரா அமைப்பை காட்டுகிறது. இருப்பினும் முன்னர் வெளியான தகவலில் கூறப்படாத ஒரு விடயம் இந்த லீக்ஸ் வழியாக வெளிப்பட்டுள்ளது.

சுழலும் பென்டா- லென்ஸ் கேமரா அமைப்பு

சுழலும் பென்டா- லென்ஸ் கேமரா அமைப்பு

சீன சமூக வலைத்தளமான 'பைடு' வழியாக வெளியான இந்த ஸ்கெட்ச் ஆனது நோக்கியா 10 சாதனத்தின் பின்புறத்தில் ஒரு சுழலும் பென்டா- லென்ஸ் கேமரா அமைப்பு இடம்பெறும் என்கிறது. அதாவது நோக்கியா 10 ஆனது நோக்கியா லுமியா 1020-ன் 41 மெகாபிக்சல் கேமராவில் காணப்படும் அளவிலான ஒரு சிறிய சுழற்சியைக் கொண்டுருக்கும்.

How To Increase the Speed of your Laptop (TAMIL)
மற்ற லென்ஸ்கள் தொகுதியின் உள்ளே

மற்ற லென்ஸ்கள் தொகுதியின் உள்ளே

இதன் மூலம் நோக்கியா 10 ஆனது பல்வேறு குவியத்தூரங்களை (போக்கல் லெங்த்) கொண்ட பல லென்ஸ்களை கொண்டிருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. வெளியான ஸ்கெட்ச் அடிப்படையில், இதன் முக்கிய கேமரா அலகானது ஒரு இரட்டை கேமரா லென்ஸ்கள் கொண்டிருக்குமென்று தோன்றுகிறது, மற்ற லென்ஸ்கள் தொகுதியின் உள்ளே மறைந்துள்ளது.

குவியத்தூரங்களை மாற்றுவதற்கும்

குவியத்தூரங்களை மாற்றுவதற்கும்

இதன் மல்டி லென்ஸ் அமைப்பானது முக்கிய கேமரா சென்சார் மற்றும் ஒரு சாதாரண நிலையான லென்ஸ் ஆகியவைகளுக்கு இடையே பொதிக்கப்பட்ட்டுள்ளது. சுழற்சியின் வாயிலாக லென்ஸ்கள் ஆனது ஸ்மார்ட்போனின் முக்கிய கேமரா மேல்பக்கம் தங்களை இடமாற்றம் செய்துகொள்ளும் என்பதையும் ஸ்கெட்ச் வெளிப்படுத்தியுள்ளது. இந்த நுட்பமானது, லென்ஸ்கள் தங்கள் குவியத்தூரங்களை மாற்றுவதற்கும், பிரதான கேமராவின் ஜூம் வரம்பை அதிகரிப்பதற்கும் அனுமதிக்கும்.

டெலிஃபோட்டோ லென்ஸாக செயல்படுமா.?

டெலிஃபோட்டோ லென்ஸாக செயல்படுமா.?

முன்னரே குறிப்பிட்டபடி, நோக்கியா 10-ன் பிரதான கேமரா அமைப்பு முதன்மை லென்ஸையும் இரண்டாம் நிலை லென்ஸையும் கொண்டிருக்கும். ஆனால் கூறப்படும் இரண்டாம் நிலை லென்ஸ் ஆனது ஒரு டெலிஃபோட்டோ லென்ஸாக செயல்படுமா அல்லது பரந்த பார்வை கோண லென்ஸாக செயல்படுமா என்பதில் தெளிவான வார்த்தைகள் ஏதுமில்லை.

16 லென்ஸ்

16 லென்ஸ்

இதற்கிடையில், நோக்கியா 10 ஸ்மார்ட்போன் தான் மல்டி-லென்ஸ் அம்சத்தினை வழங்கும் முதல் சாதனம் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டிற்கு எல்16 ஆனது 16 லென்ஸ் அமைப்பை வழங்குகிறது இருப்பினும் நோக்கியா 10 தான் இதன் தொழில்நுட்பத்துடன் வரும் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

18: 9 என்கிற விகிதத்திலான டிஸ்பிளே

18: 9 என்கிற விகிதத்திலான டிஸ்பிளே

கூறப்படும் நோக்கியா 10 ஸ்மார்ட்போனின் இதர எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தமட்டில், அது ஒரு ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மூலம் இயங்கும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும் அது 18: 9 என்கிற விகிதத்திலான டிஸ்பிளே அளவு மற்றும் பின்புறத்தில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும்.

ஐஎஃப்ஏ 2018 வர்த்தக நிகழ்ச்சியில்

ஐஎஃப்ஏ 2018 வர்த்தக நிகழ்ச்சியில்

எச்எம்டி க்ளோபல் நிறுவனம் எப்போது நோக்கியா 10-ஐ அறிமுகப்படுத்தும் என்பதில் தெளிவில்லை. ஆனால் 2018-ஆம் ஆண்டின் இறுதிக்குள் அது தொடங்கப்படக்கூடும். இன்னும் குறிப்பிட்டு கூறவேண்டுமானால் நோக்கியா 10 ஆனது ஆகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டம்பர் மாத தொடக்கத்தில் பெர்லினில் நடைபெறும் ஐஎஃப்ஏ 2018 வர்த்தக நிகழ்ச்சியில் அதன் உலகளாவிய அறிமுகத்தை சந்திக்கலாம்.

Best Mobiles in India

English summary
Nokia 10 leaked sketch reveals rotating five camera setup, how it works. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X