Home
Mobile

கூகிள் பிக்சல் போன்களுக்கு நிகரான நோக்கியா போன்கள் உருவாக்கம்.. சொன்னதே கூகிள் தான்!

நோக்கியா ஏற்கனவே நோக்கியா 9.3 ப்யூர் வியூவின் வாரிசு மாடலை உருவாக்குவதில் ஈடுபட்டு வருகிறது என்று சமீபத்திய தகவல் வெளியாகியது. ஆனால், இந்த மாடல் இன்னும் வெளியிடப்படவில்லை உருவாக்கத்தில் தான் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோக்கியா மோப் தளத்தின் தகவலின் படி இந்த சாதனம் நோக்கியா 10 என்று அழைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 10

நோக்கியா 10 சாதனத்திற்கான விவரக்குறிப்புகள் மற்றும் வெளியீட்டு குறித்த தகவல்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படாமல் நிறுவனம் கவனமாக இருந்து வருகிறது. ஆனால் சமீபத்திய தகவல் படி, நோக்கியா நிறுவனம் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் இந்தியாவின் முதல் 3 மொபைல் போன் பிராண்டுகளில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எச்எம்டி குளோபலின் முக்கிய சந்தை

எச்எம்டி குளோபலின் முக்கிய சந்தைகளில் ஒன்றாக இந்தியாவும் பட்டியலிடப்பட்டுள்ளது. கூகிள் நிறுவனத்துடன் இன்னும் ஆழமான மற்றும் ஒருங்கிணைந்த கூட்டாட்சியை நிறுவனம் எதிர்பார்த்திருக்கிறது. இந்த கூட்டாண்மை மூலம் நோக்கியா அவர்களின் சாதனங்களை மிகவும் சிறந்த சாதனமாக்கவும், அதிக திறன் கொண்ட பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகிள் நிறுவனத்துடன் நோக்கியா கொண்டுள்ள கூட்டாண்மை

கூகிள் நிறுவனத்துடன் நோக்கியா கொண்டுள்ள இந்த கூட்டாண்மை மூலம் பிக்சல் போன் போன்ற தரத்தில் நோக்கியாவின் தயாரிப்புகளில் 95 சதவீதத்தை வழங்கும் என்றும் கூகிள் கணித்துள்ளது. நோக்கியா ஸ்மார்ட்போன்கள் வரும் காலத்தில் பட்ஜெட் விலை பிக்சல் போன்களாக கருதப்படும் என்றும் கூகிள் நிறுவனத்தின் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூகிள் 2 மாதங்களுக்கு முன்பு நோக்கியாவில் முதலீடு

இதில் சிறப்பிக்கும் மற்றொரு விஷயம் என்னவென்றால், கூகிள் நிறுவனம் எப்பொழுதும் அதன் சாதனங்களை மற்ற பிராண்டுகளிலிருந்து வேறு எந்த போன்களுடனும் எப்பவும் ஒப்பிட்டுக் கூறியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கூகிள் 2 மாதங்களுக்கு முன்பு நோக்கியாவில் முதலீடு செய்ததால், நோக்கியா நிறுவனம் கூகிளின் நம்பிக்கையை முழுவதுமாக சம்பாதித்துள்ளது என்று கூறலாம்.

Best Mobiles in India

English summary
Nokia 10 in the making, Nokia has managed to earn Google's trust : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X