நோக்கியாவின் ராஜ்ஜியம் ஆரம்பம்: 6ஜிபி-8ஜிபி ரேம்; 5.8 இன்ச் டிஸ்பிளே; 6 கேம்.!

|

நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது, அடுத்ததாக ஐந்து பின்பக்க கேமராக்கள் (பென்டா-லென்ஸ் கேமரா) கொண்ட கருவி சார்ந்த பணிகளில் ஈடுபடுவதை நாம் நன்கு அறிவோம். அது நோக்கியா 10 ஆக இருக்கலாமென்ற வார்த்தைகளும் உண்டு.

நோக்கியாவின் ராஜ்ஜியம் ஆரம்பம்: 8ஜிபி ரேம்; 5.8 இன்ச் டிஸ்பிளே; 6 கேம்

அப்படியாக கூறப்படும் நோக்கியா 10 ஆனது கூறப்பட்டது பின்பக்கத்தில் பென்டா-கேமரா அமைப்பை மட்டுமின்றி இன்னும் பல பிரமாதமான வடிவமைப்பு மற்றும் அம்சங்களை பெறும் என்பதை தற்போது வெளியாகியுள்ள லீக்ஸ் புகைப்படமொன்று வெளிப்படுத்தியுள்ளது.

கண்ணாடி பின்புலம்

கண்ணாடி பின்புலம்

வெளியான சமீபத்திய கான்செப்ட் புகைப்படங்களானது நோக்கியா 10 ஒரு கண்ணாடி பின்புலம் கொண்டிருப்பதோடு, ஒரு அழகான 18: 9 என்கிற அளவிலான திரை விகிதம் கொண்ட டிஸ்ப்ளே கொண்டிருப்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.

ஸ்கெட்ச் நிஜமானால் எப்படி இருக்கும்.?

ஸ்கெட்ச் நிஜமானால் எப்படி இருக்கும்.?

இதற்கு முன்னர் வெளியான ஒரு லீக்ஸ் தகவலில் கூறப்படும் நோக்கியா 10 ஸ்மார்ட்போனின் கேமரா தொகுதியை காட்சிப்படுத்தும் ஸ்கெட்ச் ஒன்றை கண்டோம். ஆனால் இந்த புகைப்படங்களோ அந்த ஸ்கெட்ச் நிஜமானால் எப்படி இருக்கும் என்ற பார்வையை நமக்கு அளிக்கிறது.

நோக்கியா லூமியா 1020 போன்றதொரு வடிவமைப்பு

நோக்கியா லூமியா 1020 போன்றதொரு வடிவமைப்பு

இது அதிகாரப்பூர்வமான வடிவமைப்பல்ல, கான்செப்ட் (கருத்து) புகைப்படங்கள் தான் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவூட்ட விரும்புகிறோம். புகைப்படங்களின்படி, நோக்கியா 10 ஸ்மார்ட்போனின் கேமரா தொகுதியானது முந்தைய நோக்கியா லூமியா 1020 போன்றதொரு வடிவமைப்பை பெற்றுள்ளது.

ஒரு வட்டமான வடிவமைப்பிற்குள்

ஒரு வட்டமான வடிவமைப்பிற்குள்

இதற்கு நேர்மாறாக வெளியான மற்றொரு அறிக்கையானது நோக்கியா 10 ஆனது அதன் கேமரா சென்சார்களை, இடது பக்கமாக ஒரு எல்இடி பிளாஷ் உடன் செங்குத்தான அமைப்பில் கொண்டிருக்குமென்றும் கூறுகிறது. ஒருவேளை அது கருவியின் முதன்மை சென்சாராக இருக்கலாம், பிற சென்சார்கள் ஒரு வட்டமான வடிவமைப்பிற்குள் ஒருங்கிணைக்கப்படலாம்.

மீண்டுமொரு உலகளாவிய தாக்கம்

மீண்டுமொரு உலகளாவிய தாக்கம்

எல்லாவற்றிற்கும் மேலாக நோக்கியா 10-ன் பென்டா லென்ஸ் அமைப்பானது குவிய நீளத்தை சரி செய்யும் நோக்கத்தின் கீழ் பிரதான சென்சாருடன் இணையும்படி சுழலும் வடிவமைப்பையும் பெறலாம். இவைகள் அனைத்தும் உண்மையானால், நோக்கியா கருவிகள் மீண்டுமொரு உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

நோக்கியா 10-ன் அனைத்து கேமரா லென்ஸ்களும் கார்ல் ஜெயஸ் சான்றிதழ் பெறுமெனவும் கூறப்படுகிறது. இதன் கேமரா தொகுதிக்கு கீழே, கைரேகை ஸ்கேனர் ஒன்றையும் காணமுடிகிறது. அதனை தொடர்ந்து நோக்கியா சின்னம் இடம்பெறுகிறது.

18: 9 டிஸ்பிளே

18: 9 டிஸ்பிளே

இதுவரை வெளியான தகவல்களில் இருந்து, நோக்கியா 10 ஆனது ஒரு 5.8 அங்குல 18: 9 டிஸ்பிளே கொண்டிருக்க வேண்டும். நோக்கியா 7 பிளஸ், நோக்கியா 7-ன் மேம்படுத்தப்பட்ட பதிப்புடன் இணைந்து நிகழப்போகும் எம்டபுள்யூசி 2018 நிகழ்வில் அறிவிக்கப்படலாம்.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
6ஜிபி / 64ஜிபி, 8ஜிபி / 128ஜிபி

6ஜிபி / 64ஜிபி, 8ஜிபி / 128ஜிபி

சீனாவில் இருந்து வெளியானதொரு அறிக்கையின்படி, நோக்கியா 10 ஆனது க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 845 எஸ்ஓசி கொண்டு இயக்கப்படலாம் மற்றும் அது 2018-ஆம் ஆண்டின் காலாண்டிற்கு பின் வெளியிடப்படலாம். சேமிப்புத்துறையை பொறுத்தமட்டில், நோக்கியா 10 ஆனது 6ஜிபி / 64ஜிபி, 8ஜிபி / 128ஜிபி என பல்வேறு ரேம் மற்றும் சேமிப்பக கட்டமைப்புகளில் வரலாம்.

3500எம்ஏஎச் பேட்டரி

3500எம்ஏஎச் பேட்டரி

ஒரு 3500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும் இக்கருவியானது வதந்திகளின்படி ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ (பெட்டிக்கு வெளியே) கொண்டு இயங்கலாம். இவைகள் அனைத்துமே வதந்திகளாகும் மற்றும் நோக்கியா 10 பற்றி எந்தவிதமான உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தலும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Nokia 10 Concept Renders Reveal Penta Lens Module at the Back and 18:9 Display On the Front. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X