Home
Mobile

ஆளுக்கொரு நோக்கியா 1 வாங்கலாம்: ஏனெனில் அதன் விலையும், அம்சங்களும் அப்படி.!

நேற்றுவரை ஒரு வதந்தியாக நம்பப்பட்ட நோக்கியா 1 ஆனது இன்றுமுதல் எச்எம்டி க்ளோபல் மூலம் பணியாற்றப்படும் ஒரு கருவியாகியுள்ளது, உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

By Muthuraj

இதுவரையிலாக வெளியான அனைத்து நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கும் கிடைத்த மாபெரும் வரவேற்பு மற்றும் வெற்றியை தொடர்ந்து, நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது தொடர்ச்சியான முறையில் நோக்கியா சாதனங்களை அறிவித்தவண்ணம் உள்ளது.

ஆளுக்கொரு நோக்கியா 1 வாங்கலாம்: ஏனெனில் அதன் விலை அப்படி.!

வீழ்ச்சியிலிருந்து மீண்டு வந்த நோக்கியா நிறுவனம், ஆரம்பத்திலேயே அதிகப்படியான புதிய முயற்சிகளை கையாளாமல் மிகவும் சாதுரியமாக சாதாரண அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து, வெற்றிகளை சுவைத்த பின்னர் தற்போது மெல்ல மெல்ல ஹை-எண்ட் அம்சங்களை அதன் வரவிருக்கும் கருவிகளின் மீது திணித்த வண்ணம் உள்ளது. அதில் மிகவும் அதிகமான எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியுள்ள ஒரு ஸ்மார்ட்போன் தான் - நோக்கியா 1.

ஸ்மார்ட்போன் உலகின் சூடான தலைப்பு

ஸ்மார்ட்போன் உலகின் சூடான தலைப்பு

நோக்கியா 1 ஸ்மார்ட்போன் ஆனது ஏன் இவ்வளவு ஸ்பெஷல்.? ஏனெனில் - நோக்கியா 1 தான் பின்னிஷ் நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்ட் கோ ஸ்மார்ட்போன் ஆகும். வருகிற மார்ச் 2018-ல் வெளியாகுமென எதிர்பார்க்கப்படும் இக்கருவியின் சமீபத்திய லீக்ஸ் புகைப்படம் தான் ஸ்மார்ட்போன் உலகின் சூடான தலைப்பாகும்.

உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

ஆன்லைனில் உலாவரும் நோக்கியா 1 ஸ்மார்ட்போனின் புதிய கசிவானது அதன் நிஜமான வடிவமைப்பை வெளிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நேற்றுவரை ஒரு வதந்தியாக நம்பப்பட்ட நோக்கியா 1 ஆனது இன்றுமுதல் எச்எம்டி க்ளோபல் மூலம் பணியாற்றப்படும் ஒரு கருவியாகியுள்ளது, உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சற்று வித்தியாசமான வடிவமைப்பு

சற்று வித்தியாசமான வடிவமைப்பு

வெளியாகியுள்ள படத்தில் உள்ள ஒரு சாதனம் தற்போதைய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன நோக்கியா 2-வின் வடிவமைப்பை கொண்டிருக்க மற்றொரு ஸ்மார்ட்போன் ஆனது சற்று வித்தியாசமான வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து வரவிருக்கும் நுழைவு நிலை கைபேசியான நோக்கியா 1 ஸ்மார்ட்போனின் இறுதி வடிவமைப்பு உறுதியாகவில்லை என்பதை அறிய முடிகிறது.

நிறைய ஒற்றுமைகளை பகிர்ந்து கொள்ளும்

நிறைய ஒற்றுமைகளை பகிர்ந்து கொள்ளும்

நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ பதிப்பு) ஸ்மார்ட்போன் ஆனது நோக்கியா 1 என்ற பெயரின் கீழ், அமெரிக்காவில் 95 அமெரிக்க டாலர்கள் (அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.6,000/- என்ற புள்ளியில்) வெளியாகுமென முன்னர் வெளியான தகவல்கள் குறிப்பிட்டன. அமெரிக்க வெளியீட்டை தொடர்ந்து அதே விலை நிர்ணயத்தில் இந்திய சந்தையில் பிந்தைய தேதிகளில், நோக்கியா 1 ஸ்மார்ட்போன் தொடங்கப்படலாம்.

நிறைய ஒற்றுமைகளை பகிர்ந்து கொள்ளும்

நிறைய ஒற்றுமைகளை பகிர்ந்து கொள்ளும்

மேற்க்குறிப்பிட்டபடி, எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது இன்னமும்இ நோக்கியா 1 ஸ்மார்ட்போனின் இறுதி வடிவமைப்பை உறுதி செய்யவில்லை. அதனால் தான் சமீபத்திய லீக்ஸ் புகைப்படத்தில் இரண்டு வெவ்வேறு வடிவமைப்புகளுடன் கசிந்துள்ளது. ஒரு முந்தைய அறிக்கையின்படி, நோக்கியா 1 ஆனது நோக்கியா 2 உடன் நிறைய ஒற்றுமைகளை பகிர்ந்து கொள்ளும் என்று அறியப்பட்டது.

8ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு

8ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு

அம்சங்களை பொறுத்தமட்டில், நோக்கியா 1 ஆனது எச்டி தீர்மானம் கொண்ட 5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. உடன் க்வாட்-கோர் சிப்செட் உடனான 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்புடன் இணைக்கப்பட்டிருக்கலாம்.

பிளாஸ்டிக் உடல்

பிளாஸ்டிக் உடல்

ஒரு நுழைவு நிலை ஸ்மார்ட்போனாக இருப்பதால், நோக்கியா 1 ஆனது பிளாஸ்டிக் உடல் கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது. இதர அம்சங்கள் அனைத்தும் நோக்கியா 2 ஸ்மார்ட்போனை போன்றிருந்தாலும், முக்கிய வேறுபாடாக நோக்கியா 1 ஸ்மார்ட்போனின் இயக்க முறைமை திகழும்.

ஆண்ட்ராய்டு கோ மெமரி மேலாண்மை அம்சங்கள்

ஆண்ட்ராய்டு கோ மெமரி மேலாண்மை அம்சங்கள்

நோக்கியா 1 ஆனது அண்ட்ராய்டு கோ திட்டத்தின் ஒரு பகுதியாகும். அதாவது நுழைவு-நிலை ஸ்மார்ட்போன்களை குறிவைத்து வடிவமைக்கப்பட்ட ஆண்ட்ராய்டு ஓரியோவின் லைட் பதிப்பை கொண்டு களமிறங்கும் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். தற்போது வரையிலாக முழு ஆண்ட்ராய்டு கொண்டு இயங்கும் நோக்கியா 2 ஸ்மார்ட்போனில் விரைவில் ஆண்ட்ராய்டு கோ மெமரி மேலாண்மை அம்சங்கள் கொண்ட ஓரியோ அப்டேட் நிகழ்த்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் கோ, யூட்யூப் கோ

கூகுள் கோ, யூட்யூப் கோ

ஆக, நோக்கியா 1 ஆனது கூகுள் கோ, யூட்யூப் கோ போன்ற முன் நிறுவப்பட்ட பயன்பாடுகளுடன் வெளியாகும் என்பதை அறிய முடிகிறது. இதன் உத்தியோகபூர்வ வெளியீட்டு தேதி மற்றும் சாதனத்தின் விலை இன்னும் தெரியவில்லை. அடுத்த மாதம் நிகழும் எம்டபுள்யூசி2018 நிகழ்வில் வெளியிடப்பட வாய்ப்புள்ளது.

நோக்கியா 7 பிளஸ்

நோக்கியா 7 பிளஸ்

இக்கருவியுடன் சேர்த்து நோக்கியா 9, நோக்கியா 8 (2018), நோக்கியா 4, நோக்கியா 7 பிளஸ் போன்ற இதர நோக்கியா ஸ்மார்ட்போன்களை வெளியாகலாம். நோக்கியா ஸ்மார்ட்போன்கள் பற்றிய தொடர்ச்சியான அப்டேட்ஸ்ளுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருங்கள்.

Best Mobiles in India

English summary
Nokia 1, the Finnish Brand’s First Android Go Device Surfaced Online in a New Image. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X