நோக்கியா 1 சாதனத்திற்கு புத்தம் புதிய அப்டேட்.!
எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது நோக்கியா 1 சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு 10(கோ பதிப்பு) அப்டேட்-ஐ வழங்கத் துவங்கியுள்ளது.குறிப்பாக இந்தயாவில் உள்ள நோக்கியா 1 சாதனங்களுக்கு இந்த புதிய அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்போது வழங்கப்பட்டடுள்ள அப்டேட் ஆனது பங்களாதேஷ், கம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், நேபாளம், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளிலும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

இன்றைய நிலவரப்படி, நோக்கியா 1, நோக்கியா 5.1 பிளஸ் , நோக்கியா 3.1 பிளஸ் , நோக்கியா 9 ப்யர்வியூ , நோக்கியா 6.2 , நோக்கியா 8 சிரோக்கோ , நோக்கியா 8.1 , நோக்கியா 7.2 , நோக்கியா 7 பிளஸ் , நோக்கியா 6.1, நோக்கியா 7.1 , நோக்கியா 6.1 பிளஸ் , நோக்கியா 4.2, நோக்கியா 2.2 , நோக்கியா 3.2 மற்றும் நோக்கியா 2.3 அனைத்தும் ஆண்ட்ராய்டு 10 க்கு மேம்படுத்தப்பட்டுள்ளன.
சமீபத்திய புதுப்பிப்பு பயனர்களுக்கான தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அம்சங்களையும், இருண்ட தீம், ஃபோகஸ் பயன்முறை, பிரத்யேக 'தனியுரிமை பிரிவு மற்றும் பலவற்றையும் தருகிறது. சமீபத்திய Android 10 உருவாக்கத்தைப் பதிவிறக்குவதற்கு பயனர்கள் அமைப்புகள்> மென்பொருள் புதுப்பிப்புக்குச் செல்லலாம்.

நோக்கியா 1 ஸ்மார்ட்போன் பொதுவாக 4.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 854 x 480 பிக்சல் தீர்மானம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
நோக்கியா 1 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் எம்டி6737எம் 64-பிட் குவாட்-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஒஎஸ் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நோக்கியா 1 ஸ்மார்ட்போனில் 5எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 2மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி , என்எப்சி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. நோக்கியா 1 ஸ்மார்ட்போனில் 2150எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








