ஆண்ட்ராய்டு ஓரியோ கோ இயங்குதளத்தில் நோக்கியா1: ரிவியூ எப்படி?

பெரிய அளவில் பெரிய திரையுடன் வெளிவரும் ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கத்திற்கு மத்தியில் கைக்கு அடக்கமாக வெளிவருகிறது நோக்கியா1. இதன் வடிவமைப்பு பழைய லூமியா போன்களை நினைவுபடுத்துகிறது.

|

இன்றைய தேதியில் விலை குறைந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனான நோக்கியா 1, எச்.எம்.டி குளோபல் நிறுவனத்தின் முதல் தயாரிப்பும் கூட. குறைந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்ட ஆண்ராய்டு ஓரியோ கோ (Oreo Go edition) இயங்குதளத்தில் இயங்கிறது நோக்கியா1.

ஸ்மாட்போன் சந்தையின் அடிமட்ட பகுதியையும், முதல்முறை ஸ்மார்ட்போன் வாங்குபவர்களை குறிவைத்து சாதாரண போன்களின் வசதிகளை மேம்படுத்தி உருவாகியுள்ளது நோக்கியா1.

யம் பல்வேறு வசதிகளுடனும் வருவதால் நோக்கியா1 ஐ பரிந்துரைப்பது கடினமே. செயல்திறன் குறைவு மற்றும் ஆண்ராய்டு கோ வின் பிரச்சனைகள் நோக்கியாரூ.5,499 விலையில் வெளியாகும் நோக்கியா1, சியோமி ரெட்மீ 5ஏ மற்றும் 10.orD உடன் போட்டிபோடுகிறது. இதின் நிறை குறைகளை இங்கே காணலாம்.

நோக்கியா1-ன் வடிவமைப்பு

நோக்கியா1-ன் வடிவமைப்பு

பெரிய அளவில் பெரிய திரையுடன் வெளிவரும் ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கத்திற்கு மத்தியில் கைக்கு அடக்கமாக வெளிவருகிறது நோக்கியா1. இதன் வடிவமைப்பு பழைய லூமியா போன்களை நினைவுபடுத்துகிறது.

மிக குறைந்த விலையில் வருவதால் எதிர்பார்த்தது போலவே , முழுவதும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டுள்ள நோக்கியா1 9.5மில்லிமீட்டர் அடர்த்தி கொண்டது. ஆனாலும் கையில் இலகுவாக பிடிக்கும் வகையில் உள்ளது. இதில் கழற்றக்கூடிய பேட்டரி, 2 சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி கார்டு போடும் வசதியும் உள்ளது. பரிசோதனையின் போது, பலமுறை கீழே போட்டும் சில கீறல்களை தவிர வேறெந்தவித சேதமும் இல்லை.

 சிறப்பம்சங்கள், செயல்திறன், மென்பொருள்

சிறப்பம்சங்கள், செயல்திறன், மென்பொருள்

குறைந்த செயல்திறன் கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்காகவே ஆண்ட்ராய்டு ஓரியோ கோ தளத்தை வடிவமைத்துள்ளது கூகுள். 1GB ரேமுடன் கூடிய 1.1GHz quadcore mediqTek MT6737M இயக்கியுடன் வெளிவருகிறது.

மிகவும் சிறிதாக 2150mAh திறனுடைய பேட்டரியும், 450×854 பிக்சல் உள்ள 4.5இன்ச் ஐ.பி.எஸ் திரையும் உள்ளது. மேலும் இது 8GB உள்ளார்ந்த சேமிப்பு திறன் மற்றும் 128GB வரை நீட்டிக்க கூடிய வெளிப்புற சேமிப்புதிறனையும் கொண்டு ஒரு வகையாக வெளிவருகிறது.

எல்.ஈ.டி வசதியுள்ள 5மெகாபிக்சல் பின்புற கேமரா, 2 மெகா பிக்சல் உள்ள முன்புற கேமரா உள்ளது. 4G VOLTE, வைபை 802.11 b/g/n,ப்ளூடூத் 4.2, ஜி.பி.எஸ்/ஏ-ஜி.பி.எஸ், எப்.எம் ரேடியோ வசதிகளும் உள்ளன.

ஆனால் செயலிகளின் செயல்திறன் மிக குறைவாக தான் உள்ளது. 4/5 செயலிகளை ஒரே நேரத்தில் இயக்கினால் ஆண்ட்ராய்டு செயலிழக்கிறது. மேப்ஸ் செயலியை உபயோகித்தால் எப்போதும் வழியை கண்டறியவே முடியாது. கேம் விளையாடினால் மொபைல் சூடாகிறது.

பேட்டரி

பேட்டரி

பேட்டரி பரிசோதனையில் இது, 8மணி45 நிமிடங்கள் தான் தாக்குபிடித்தது. அதன் செயல்திறனும் சராசரி தான். குறைவாக பயன்படுத்தினாலும் தினமும் சார்ஜ் போட வேண்டும். இது முழுவதும் சார்ஜ் ஆக 2 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது.

மொத்தத்தில் நோக்கியா1 எப்படி?

மொத்தத்தில் நோக்கியா1 எப்படி?

ரூ5,499 என்ற விலை தான் மிகப்பெரிய பிரச்சனை. ரூ3000-4,000 வரை இருந்திருந்தால் சரியானது. ஜியோ பயனர்களுக்கு கேஸ்பேக் ஆப்பர் மூலம் ரூ3,299 க்கு கிடைக்கிறது. ரூ10,000 உள்ளாகவே சிறந்த மொபைல்கள் கிடைக்கும் போது, இதை பயனர்கள் தேர்வு செய்வது கடினமே.

ரெட்மீ5ஏ மற்றும் 10.orD சற்றே விலை அதிகமாகவும், அதே சமயம் பல்வேறு வசதிகளுடனும் வருவதால் நோக்கியா1 ஐ பரிந்துரைப்பது கடினமே. செயல்திறன் குறைவு மற்றும் ஆண்ராய்டு கோ வின் பிரச்சனைகள் நோக்கியா1ஐ நிராகரிக்க முக்கிய காரணங்களாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Nokia 1 specifications performance and software Review ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X