நோக்கியா 7 ப்ளஸ் உட்பட வரிசைக்கட்டும் 6 நோக்கியா ஸ்மார்ட்போன்கள்.!

எச்எம்டி க்ளோபல் (நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள நிறுவனம்) இந்த 2018-ஆம் ஆண்டில் பல வகையான விற்பனைப்புள்ளி மாற்றங்களை நிகழ்த்தவுள்ளது.

|

நோக்கியாவின் தீவிர பிரியர்களே, இந்த 2018-ஆம் ஆண்டில் நோக்கியா நிறுவனத்தின் இந்திய ராஜாங்கம் மீண்டும் உருவாகுகிறது.

நோக்கியா 7 ப்ளஸ் உட்பட வரிசைக்கட்டும் 6 நோக்கியா ஸ்மார்ட்போன்கள்.!

கடந்த ஆண்டில் "எந்த விதமான துணிவுமிக்க காரியங்களிலும் ஈடுபடாமல்" மிகவும் சாதாரணமான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த எச்எம்டி க்ளோபல் (நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள நிறுவனம்) இந்த 2018-ஆம் ஆண்டில் பல வகையான விற்பனைப்புள்ளி மாற்றங்களை நிகழ்த்தவுள்ளது.

அதன் முதல் பகுதியாக இந்த 2018 ஆம் ஆண்டில் நோக்கியா 1, நோக்கியா 4, நோக்கியா 7 பிளஸ், நோக்கியா 9 என வரிசையாக ஸ்மார்ட்போன்களை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 2018-ஆம் ஆண்டில் தொடங்கப்படும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் ஆனது சமீபத்திய நோக்கியா கேமரா பயன்பாட்டை அடிப்படையாகவே கொண்டுவரும்.

நோக்கியா 6 (2018) மற்றும் நோக்கியா 8 (2018)

நோக்கியா 6 (2018) மற்றும் நோக்கியா 8 (2018)

ஏற்கனவே எச்எம்டி குளோபல் நிறுவனமானது அசல் நோக்கியா 6 மற்றும் நோக்கியா 8 கருவிகளின் அப்டேட் மாடல்கள் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அந்த கருவிகள் நோக்கியா 6 (2018) மற்றும் நோக்கியா 8 (2018) என்கிற பெயரில் வெளியாகுமெனவும் வதந்திகள் கூறுகின்றன.

என்னென்ன ஸ்மார்ட்போன்கள்.?

என்னென்ன ஸ்மார்ட்போன்கள்.?

எனவே, 2018-ஆம் ஆண்டில் எச்எம்டி குளோபல் நிறுவனத்திடமிருந்து மொத்தம் ஆறு ஸ்மார்ட்போன்களை நாம் எதிர்நோக்கலாம். அவைகள் என்னென்ன ஸ்மார்ட்போன்கள்.? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கலாம் போன்றே விவரங்களை விரிவாக காண்போம்.

அடுத்தகட்ட மாறுபாடுகள்

அடுத்தகட்ட மாறுபாடுகள்

இதுவரை நோக்கியா 9, நோக்கியா 6 (2018), நோக்கியா 8 (2018) மற்றும் நோக்கியா 1 ஆகிய ஸ்மார்ட்போன்களை பற்றிய செய்திகளையே நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் தற்போது நோக்கியா 4 மற்றும் நோக்கியா 7 பிளஸ் (சமீபத்திய நோக்கியா 7 ஸ்மார்ட்போனின் அடுத்தகட்ட மாறுபாடு) ஆகியவைகள் பற்றிய தகவல்கள் கசிந்துளளன.

பிகே டியர்டவுன்

பிகே டியர்டவுன்

கிடைக்கப்பெற்ற தகவலை சமீபத்திய நோக்கியா கேமரா பயன்பாடான (latest Nokia Camera application) ஏபிகே டியர்டவுன் (APK Teardown) வெளிப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 1

நோக்கியா 1

வெளியாகியுள்ள ஒரு பட்டியலின்படி இந்த கேமரா ஆப் ஆனது நோக்கியா 1, நோக்கியா 4, நோக்கியா 7 பிளஸ், மற்றும் நோக்கியா 9 போன்ற புதிய மாடல்களுடன் தற்போது கிடைக்கக்கூடிய அனைத்து நோக்கியா மாடல்களிலும் கிடைக்கும். துரதிஷ்டவசமாக, இந்த கேமரா ஆப் அப்டேட் பட்டியலில் நோக்கியா 6 இல்லை (2018) மற்றும் நோக்கியா 8 (2018) ஸ்மார்ட்போன்கள் இடம்பெறவில்லை.

நோக்கியா 6 (2018)

நோக்கியா 6 (2018)

கூறப்படும் நோக்கியா 4 ஆனது நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு இடையில்ர்ந்து உட்கார்ந்துள்ளது. அது ஸ்னாப்டிராகன் 435 எஸ்ஓசி கொண்டு இயங்கலாம். மேலும் நோக்கியா 6 (2018) ஆனது ஸ்னாப்டிராகன் 630 அல்லது ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி உடன் வெளிவரலாம்.

நோக்கியா 7

நோக்கியா 7

இந்நிலைப்பாட்டில், எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது நோக்கியா 7 ஸ்மார்ட்போனின் ப்ளஸ் பதிப்பை உருவாக்கம் செய்வது நியாமானதாகவே தெரிகிறது. இதனடிப்படையில் இந்த 2018-ல் நோக்கியா ஸ்மார்ட்போன்களின் அணிவகுப்பு எப்படி இருக்கும் என்பதை தோராயமான கணித்தால்..

நோக்கியா 4

நோக்கியா 4

நோக்கியா 1 ஆனது ஒரு நுழைவு நிலை வன்பொருளுடனான ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனாக இருக்கும்; நோக்கியா 4 ஆனது நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5-க்கு இடையே உட்கார்ந்து ஸ்னாப்டிராகன் 435 அல்லது 450 எஸ்ஓசி உடன் வரலாம்.

நோக்கியா 6 (2018)

நோக்கியா 6 (2018)

நோக்கியா 6 (2018) கிட்டத்தட்ட ஸ்னாப்டிராகன் 630 அல்லது 660 எஸ்ஓ சி கொண்டு வெளியாவது உறுதி மற்றும் நோக்கியா 7 பிளஸ் நிச்சயமாக ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி கொண்டு தான் அறிமுகமாகும். நோக்கியா 6 (2018) ஆனது ஸ்னாப்டிராகன் 630 எஸ்ஓசி கொண்டு வந்தால், பின்னர் களமிறங்கும் நோக்கியா 7 பிளஸ் ஆனது ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி உடன் வரும்.

நோக்கியா 7 பிளஸ்

நோக்கியா 7 பிளஸ்

நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் ஆனது ஒரு 18: 9 திரை விகிதம் கொண்டு வெளியாக வாய்ப்புள்ளது. மறுகையில் உள்ள நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனும் அதே திரை விகிதம் கொண்டு வரலாம். நோக்கியா 8 (2018) மற்றும் நோக்கியா 9 ஆகிய இரு கருவிகளும் ஸ்னாப்ட்ராகன் 835 எஸ்ஓசி உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா 10

நோக்கியா 10

இந்நேரத்தில் சமீபத்தில் சீனாவில் இருந்து வெளியான ஒரு புதிய கசிவானத்து நோக்கியா 10 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்களை உள்ளடக்கியுள்ளதென்பதும், அக்கருவி ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓ கொண்டு இயங்கும் மற்றும் 2018 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் துவங்கப்படும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Nokia 1, Nokia 4, Nokia 7 Plus, and Nokia 9 are the Upcoming Smartphones from HMD Global in 2018. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X