இந்தியா: நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.! இப்போதே முந்துங்கள்.!

நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.8-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

|

எச்எம்டி குளோபல் நிறுவனம் தற்சமயம் தனது நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது. . மேலும் 6ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 6.1 பிளஸ் வாங்கும் பயனர் தேர்வுசெய்யப்பட்ட
வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 15சதவீதம் கேஷ்பேக் பெறமுடியும். அதுவும் இந்த கேஷ்பேக் சலுகை ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா: நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

தற்சமயம் நோக்கியா 1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1500-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.3,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் நோக்கியா 2.1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1500-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.5,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.18,499-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.16,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனின் பல்வேறு
சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 நோக்கியா 6.1 பிளஸ்:

நோக்கியா 6.1 பிளஸ்:

நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.8-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2280 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதி:

ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதி:

நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த
ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கேமரா:

கேமரா:

நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 16எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 16எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இக்கருவி வெளிவந்துள்ளது.

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி,என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 3060எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia 1 Nokia 2 1 Nokia 61 Plus Price in India Cut Up to Rs 1500: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X