Just In
- 17 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 19 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 19 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 20 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- News
டெல்லிக்கு பறக்கும் ‘இன்புட்ஸ்’.. பல ஆங்கிள்கள்.. பின்வாங்கும் பாஜக? மூத்த பத்திரிகையாளர் ‘பளிச்’!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. 3வது முறையாக ஜெர்மனி சாம்பியன்.. பரபரப்பான டிவிஸ்டில் நடந்த இறுதிப் போட்டி
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Movies
சூர்யா 42 படத்தின் தலைப்பு இதுதானா.. ஒர்க்அவுட் ஆகுமா ‘வி’ சென்டிமெண்ட்!
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ரூ.6,600/-க்கு நோக்கியா 1: நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன்.!
நோக்கியா ஸ்மார்ட்போன்களின் புதிய இல்லமான (நோக்கியா கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள) எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது தொடர்ச்சியான முறையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது. துவண்டு போன நோக்கியாவின் சந்தையை மீண்டும் நிலைநாட்டிய பெருமை நிச்சயமாக எச்எம்டி க்ளோபல் நிறுவனத்திற்கே சேரும்.
அந்த பெருமைகளின் பட்டியலில் அடுத்ததாக இணையவுள்ளது - நோக்கியா 1 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் நுழைவு நிலை சாதனமாகவும், தற்போதைய நுழைவு நிலை ஸ்மார்ட்போன் ஆன நோக்கியா 2 கருவியை விட குறைவான பட்ஜெட் கொண்டதாகவும் இருக்கும்.

முதல் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன்
நோக்கியா 1 ஆனது வருகிற 2018-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது பிராண்டின் முதல் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 2018 மார்ச் மாதம் ரஷ்யாவில் 5,990 ரூபெல்ஸ் என்கிற நிர்ணயத்தில் அறிமுகமாகலாம்.

நோக்கம்
ஆண்ட்ராய்டு கொண்டு இயங்கும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் பல சந்தையில் வெற்றிகரமாகை அறிமுகமான பிறகு, உலகெங்கிலும் ஒழுக்கமான சந்தை பங்கைப் பெற வேண்டும் என்பதே 2018-ஆம் ஆண்டிற்கான எச்எம்டி க்ளோபல் நிறுவனத்தின் நோக்கமாகும்.

நுழைவு நிலை கைபேசி
அதன் விளைவாக வருகிற 2018-ஆம் ஆண்டில், நோக்கியா நிறுவனத்தின் சிறந்த கருவிகள் வெளியாவது உறுதியாகியுள்ளது. கூகுள் சமீபத்தில் நுழைவு நிலை கைபேசிகளுக்காக வடிவமைக்கப்பட்ட அதன் ஆண்ட்ராய்டு ஓரியோவை (கோ பதிப்பு) அறிவித்தது. இந்த பதிப்பை புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை தொடங்குவதன் மூலம் பயன்படுத்தி கொள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்திய சந்தையில்
எல்டர் முர்டசின் (@eldarmurtazin) வெளியிட்டுள்ள ஒரு ட்வீட் படி, நோக்கியா 1 ரஷ்யாவில் வருகிற மார்ச் 2018-ல் தொடங்கப்படும். அதே நேரத்தில் இந்திய சந்தையிலும் துவங்கபடலாம். அக்கருவி இந்திய சந்தையை மனதில் வைத்து, கூகுள் ஆண்ட்ராய்ட் கோ பதிப்பின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

8ஜிபி உள்ளடக்க சேமிப்பு
மேலும் வெளியான ட்வீட் படி, நோக்கியா 1 ஸ்மார்ட்போன் ஆனது நுழைவு நிலை வன்பொருட்களை கொண்டுள்ளது. அதாவது எச்டி டிஸ்ப்ளே, 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு ஆகியவைகளை கொண்டு வடிவமைக்கப்படும்.

இந்திய விலை
இந்த அம்சங்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நோக்கியா 2 ஸ்மார்ட்போனின் அம்சங்களை ஒற்றுள்ளதென்பதால் இதன் இந்திய விலை நிர்ணயமானது (மீடியாடெக் எஸ்ஓசி-யின் தகவலின்படி) ரூ.6,600/- என்கிற புள்ளியை எட்டலாம்.

ஆச்சரியப்படுவதற்கில்லை
ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) பதிப்பானது, 2018 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வெளியாகும் ஸ்மார்ட்போன்களில் இடம்பெறுமென கூகுள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ள நிலைப்பாட்டில், நோக்கியா 1 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) கொண்டு அறிமுகமானால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மூன்று முக்கிய கூறு
ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஆனது மூன்று முக்கிய கூறுகளை உள்ளடக்கியுள்ளது. அது இயக்க முறைமை (ஆப்ரேட்டிங் சிஸ்டம்), கூகுள் ஆப்ஸ் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் ஆகும்.

குறைவான சேமிப்பக இடைவெளி மற்றும் ரேம் பயன்பாடு
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவின் மேல் கட்டப்பட்டுள்ள இந்த கூகுள் கோ ஆனது கூகுள் அசிஸ்டென்ட், யூடியூப், ஜிமெயில், மேப்ஸ், முதலியன பயன்பாடுகளின் பதிப்புகளை நிறுவனம் ஏற்கனவே அறிவித்துவிட்டது. கூறிவிட்டன. இவைகள் அனைத்துமே குறைவான சேமிப்பக இடைவெளி மற்றும் ரேம் பயன்பாட்டையே உட்கொள்ளுமென்பதும் குறிப்பிடத்தக்கது.

மீடியாடெக் அல்லது க்வால்காம் சிப்செட்
கூடுதலாக, க்வால்காம் மற்றும் மீடியா டெக் ஆகிய இரண்டுமே ஆண்டராய்டு ஓரியோ கோ பதிப்பிற்கு தங்கள் ஆதரவை அறிவித்துள்ளன. அதாவது நோக்கியா 1 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் அல்லது க்வால்காம் சிப்செட் இடம்பெறுமென்று அர்த்தம். அதுமட்டுமல்லாமல் லாவா, மைக்ரோமேக்ஸ், இன்டெக்ஸ் போன்ற பிற பிராண்டுகளின் கருவிகளிலும் ஆண்ட்ராய்டு ஓரியோ கோ பதிப்பு இடம்பெறும் .
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470