சூப்பர் பட்ஜெட் விலையில் நோக்கியா 1: இந்திய விற்பனை தேதி அறிவிப்பு.!
நோக்கியா 1 ஸ்மார்ட்போனில் 5எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 2மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் அதிகம் எதிர்பார்த்த நோக்கியா 1 ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது,அந்நிறுவனம். மேலும் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. வரும் மார்ச் 28-முதல் இந்த நோக்கியா 1 ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 1 ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஜியோ நிறுவனம் ரூ.2200 கேஷ்பேக் மற்றும் டேட்டா ஆஃபர் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனம் சிவப்பு மற்றும் நீலம் போன்ற நிறங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 1 :
நோக்கியா 1 ஸ்மார்ட்போன் பொதுவாக 4.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 854 x 480 பிக்சல் தீர்மானம்
மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

மீடியாடெக்:
நோக்கியா 1 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் எம்டி6737எம் 64-பிட் குவாட்-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஒஎஸ் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேமரா:
நோக்கியா 1 ஸ்மார்ட்போனில் 5எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 2மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


விலை:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி , என்எப்சி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்எனக் கூறப்படுகிறது. நோக்கியா 1 ஸ்மார்ட்போனில் 2150எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் உண்மை விலை 5,499-ஆக உள்ளது. ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள கேஷ்பேக் மூலம் குறைந்த விலையில் இந்த ஸ்மார்ட்போனைவாங்க முடியும்.


Click it and Unblock the Notifications