ஒன்னு இல்ல மூன்று மாடல்: வெவ்வேறு விலையில் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்!
எச்எம்டி குளோபல் நிறுவனம் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே எச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன்களான நோக்கியா 6.3 மற்றும் நோக்கியா 7.3 மாடலை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்தது.

விரைவில் அறிமுகமாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்
இந்த நிலையில் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நோக்கியா பவர் பயனரின் அறிக்கையின்படி, முதல் அல்லது இரண்டாம் காலாண்டில் மூன்று புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 1.4, நோக்கியா 6.3 மற்றும் நோக்கியா 7.3
இந்த வரவிருக்கும் மாடல்கள் நோக்கியா 1.4, நோக்கியா 6.3 மற்றும் நோக்கியா 7.3 ஆகியவையாக இருக்கும் என கூறப்படுகிறது. நோக்கியா 1.4 சாதனத்தை தவிர நோக்கியா 6.3 மற்றும் நோக்கியா 7.3 குறித்த தகவல்கள் கடந்தாண்டு முதலே வெளிவந்த வண்ணம் உள்ளன. அதேபோல் நோக்கியா 6.4 மற்றும் நோக்கியா 7.4 ஆகியவை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா 1.4 ஸ்மார்ட்போன்கள் அம்சங்கள்
வரவிருக்கும் நோக்கியா 1.4 ஸ்மார்ட்போன்களில் என்ன அம்சங்கள் எதிர்பார்க்கலாம் என்ற சில தகவல்கள் கசிந்துள்ளது. இது 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, குவாட் கோட் செயலி, இரட்டை பின்புற கேமரா, 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி சேமிப்பு வசதியோடு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. நோக்கியா 1.4 ஸ்மார்ட்போன் தோராயமாக ரூ.9000 என்ற விலையில் கிடைக்கும் எனவும் இது பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
எப்போது அறிமுகம்
நோக்கியா 6.3 மற்றும் நோக்கியா 7.3 ஸ்மார்ட்போன்கள் முதல் காலாண்டு இறுதியிலோ அல்லது இரண்டாவது காலாண்டின் ஆரம்பத்திலோ நோக்கியா 6.4 மற்றும் நோக்கியா 7.4 என அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேமரா உள்ளிட்ட அம்சங்கள்
நோக்கியா 6.3 ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 730 எஸ்ஓசி செயலி மற்றும் 24 எம்பி முதன்மை கேமரா உள்ளிட்டவைகளோடு வரும் என முந்தைய கசிவுகள் தெரிவித்தன. நோக்கியா 7.4 இன்ச் ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளே ஸ்னாப்டிராகன் 690 எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படும் எனவும் இதில் 24 எம்பி செல்பி கேமரா மற்றும் 48 எம்பி முதன்மை கேமரா இருக்கும் என கூறப்படுகிறது.

4500 எம்ஏஎச் மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி
அதேபோல் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் முறையே 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆகியவை கொண்டிருக்கும் எனவும் இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications