Nokia 1.3: விரைவில்: 6-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் நோக்கியா 1.3.!
எச்எம்டி குளோபல் நிறவனம் விரைவில் புதிய நோக்கியா 1.3 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது,அதைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.

நோக்கியா 1.3
வெளிவந்த தகவலின் அடிப்படையில் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் ஆனது 6-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த திரைவிகிதம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை கொண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக்டோ-கோர் மீடியாடெக்
இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் அமைப்பை பற்றி பேசுகையில், ஆக்டோ-கோர் மீடியாடெக் சிப்செட் வசதியுடன்வெளிவரும் என்றும், பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம் இவற்றும் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கும் மக்களுக்கு கண்டிப்பாக பயன்படும்.

1ஜிபி ரேம்
இந்த நோக்கியா 1.3 ஸ்மார்ட்போனி 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும்கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக
MWC 2020 நிகழ்வின் போது நோக்கியா 1.3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4000எமஏஎச் பேட்டரி
நோக்கியா 1.3 ஸ்மார்ட்போனில் 4000எமஏஎச் பேட்டரி பொறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 105வாட்
சார்ஜிங் ஆதரவு, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போனற் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டுஇந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8எம்பி ரியர் கேமரா
வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒற்றை கேமரா மட்டுமே பொறுத்தப்படும் எனத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவுடனும் இந்தஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications