சாம்சங் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு இப்படி ஒரு ஏமாற்றமா? அச்சச்சோ.! FE பிரியர்கள் இதை விரும்பவே மாட்டார்கள்..

|

சாம்சங் ரசிகர்களுக்கு இந்த செய்தி ஒரு கசப்பான செய்தியாகி இருக்கலாம் அல்லது உங்களைக் கவலைப்பட வைக்கக்கூடிய ஒரு செய்தியாகக் கூட இந்த செய்தி இருக்கலாம். காரணம், சாம்சங் நிறுவனம் அதன் போர்ட்போலியோவில் இருந்து சாம்சங் கேலக்ஸி ஃபேன் எடிஷன் (FE) சீரிஸ் சாதனங்களை நீக்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் பற்றி கூடுதலாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஃபேன் எடிஷன் (FE) சீரிஸ்

சாம்சங் கேலக்ஸி ஃபேன் எடிஷன் (FE) சீரிஸ்

சாம்சங் கேலக்ஸி ஃபேன் எடிஷன் (FE) சீரிஸ் சாதனங்கள் இந்தியா போன்ற சந்தைகளில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. காரணம், இவற்றின் மலிவு விலை மற்றும் அற்புதமான அனுபவத்தின் காரணமாக அதிக ரசிகர்களை இந்த சாதனம் கவர்ந்திழுத்தது. இப்படிப்பட்ட சாதனம் இனி கிடைக்காது என்று வெளியான தகவல் சாம்சங் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samsung Galaxy S21 FE தான் கடைசியா?

Samsung Galaxy S21 FE தான் கடைசியா?

சமீபத்தில் வெளியான ஒரு புதிய வளர்ச்சியில், சாம்சங் FE சாதனங்களின் வரிசையை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக Sammobile தெரிவித்துள்ளது. இதன் பொருள் Samsung Galaxy S21 FE ஆனது நிறுவனத்தின் கடைசி ஃபேன் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலாக இருக்கப் போகிறது. மற்றொரு புறம், மிகவும் மலிவு விலையில் S21 FE ஸ்மார்ட்போனை சாம்சங் 4G சிப் (பெரும்பாலும் Snapdragon 720G) உடன் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது என்பது ஒரு விசித்திரமான வளர்ச்சியாகும்.

உலக ஹேக்கிங் ரேங்கிங் பட்டியலில் இந்தியாவிற்கு என்ன இடம்? நம்பமுடியாத அளவு சைபர் குற்றங்கள் பதிவு..உலக ஹேக்கிங் ரேங்கிங் பட்டியலில் இந்தியாவிற்கு என்ன இடம்? நம்பமுடியாத அளவு சைபர் குற்றங்கள் பதிவு..

ஏன் FE சீரிஸ் நிறுத்தப்படும் ?

ஏன் FE சீரிஸ் நிறுத்தப்படும் ?

சரி, இப்படி இருக்கையில் ஏன் FE சீரிஸ் நிறுத்தப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது? இதன் பின்னணி என்ன என்று ஆராய்ந்த போது, சாம்சங் நிறுவனம் அதன் Samsung Galaxy S22 தொடரை 2022 ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே வெளியிட்டது. அதன்பிறகு நிறுவனம் Samsung Galaxy S22 FE ஸ்மார்ட்போன் மாடலை அந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை.

Samsung Galaxy S22 FE பற்றி சத்தமே இல்லாமல் இருக்கும் நிறுவனம்

Samsung Galaxy S22 FE பற்றி சத்தமே இல்லாமல் இருக்கும் நிறுவனம்

Samsung Galaxy S22 FE ஸ்மார்ட்போன் சாதனம் இதுவரை எந்த சான்றிதழ் தளத்திலும் காணப்படவில்லை என்பதே இப்போது சாம்சங் ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளது. எந்தவொரு சான்றிதழ் தளங்களிலும் Samsung Galaxy S22 FE ஸ்மார்ட்போன் இல்லாதது, கேலக்ஸி S22 FE ஐ அறிமுகப்படுத்துவதில் சாம்சங் மிகவும் உற்சாகமாக இல்லை என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Samsung Galaxy S22 FE மட்டும் ஏன் மிஸ்ஸிங்?

Samsung Galaxy S22 FE மட்டும் ஏன் மிஸ்ஸிங்?

சாம்சங் நிறுவனம் அதன் போர்ட்போலியோவில் FE சாதனம் தொடங்கும் போதெல்லாம், மற்ற பிரீமியம் சாம்சங் ஸ்மார்ட்போன்களில் இருந்து ரசிகர்களின் கவனத்தை அதிகமாக FE சீரிஸ்கள் ஈர்க்கிறது என்பதால் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கக் கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இதுவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. இப்போது வரை சாம்சங் கேலக்ஸி S22 FE பற்றி எந்த தகவலும் இணையத்தில் காணப்படவில்லை.

Samsung Galaxy FE வரிசை கைவிடப்பட்டதா?

Samsung Galaxy FE வரிசை கைவிடப்பட்டதா?

சமீபத்திய அறிக்கையின் படி, சாம்சங் நிறுவனம் Samsung Galaxy FE வரிசையை முழுவதுமாக கைவிடக்கூடும் என்று கருதப்படுகிறது. பல Galaxy FE ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு இது மிகவும் ஏமாற்றம் தரும் விஷயமாக இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. Samsung Galaxy S22 FE ஸ்மார்ட்போனை பற்றி இப்போது எந்த உரையாடலும் இல்லை. சாம்சங் அதைத் தொடங்க திட்டமிட்டால், சாதனம் குறைந்தபட்சம் சில சான்றிதழ் தளங்களில் காணப்பட்டிருக்க வேண்டும்.

சாம்சங் பிரீமியம் சாதனங்கள் மீது மட்டும் கவனம் செலுத்துகிறதா?

சாம்சங் பிரீமியம் சாதனங்கள் மீது மட்டும் கவனம் செலுத்துகிறதா?

ஆனால் அது நடக்காததால், சாம்சங் நிறுவனம் அதன் பட்டியலில் இருந்து Samsung Galaxy S22 FE ஐத் தவிர்த்துவிட்டு Galaxy S22 பிரீமியம் சாதனங்களை விற்பனை செய்வதில் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்கி வருகிறதோ என்ற ஒரு கணிப்பு கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சாம்சங் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை. ஆனால், என்ன நடக்கப் போகிறது என்பது வரும் மாதங்களில் தெளிவாகத் தெரியும்.

Best Mobiles in India

English summary
No Sign Of Launching Samsung Galaxy S22 FE This Year Smartphone Lovers Will Not Like This : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X