போய் வா நண்பா.. பழைய OnePlus போன்களின் கதை முடிஞ்சது.. இந்த LIST-ல உங்க மாடல் இருக்கா?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் தனது ஆக்சிஜன் ஓஎஸ் 16 வெளியீட்டை (Oxygen OS 16 Rollout) நிறைவு செய்துள்ளது. இந்நிறுவனம் ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ்-ஐ (Android 17) அடிப்படையாக கொண்ட அதன் அடுத்த பெரிய அப்கிரேட் ஆன ஆக்சிஜன் ஓஎஸ் 17-ஐ (Oxygen OS 17) உருவாக்கும் பணியில் ஏற்கனவே ஈடுபட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அப்டேட்டின் கீழ் யூஸர் இன்டர்பேஸ் (UI) முழுவதும் சில முக்கியமான மேம்படுத்தல்கள், பல நுணுக்கமான மாற்றங்கள் மற்றும் புதிய செக்யூரிட்டி மற்றும் ப்ரைவஸி அப்கிரேட்ஸ் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இங்கே "பேட் நியூஸ்" என்னவென்றால் மேற்கண்ட எல்லாமே லேட்டஸ்ட் மற்றும் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

துரதிர்ஷ்டவசமாக, ஒன்பிளஸ் நிறுவனத்தின் கீழ் வாங்க கிடைக்கும் பழைய டிவைஸ்கள் (பழைய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் மற்றும் பழைய ஒன்பிளஸ் டேப்லெட் மாடல்கள்) ஆக்சிஜன் ஓஎஸ் 17 அப்பேட்டை பெற தவறக்கூடும். ஏனெனில் அவைகள் ஏற்கனவே வாக்குறுதியளிக்கப்பட்ட எண்ணிக்கையிலான ஓஎஸ் அப்டேட்களை பெற்றுவிட்டன. அத்தகைய டிவைஸ்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்
ஒன்பிளஸ் பிளாக்ஷிப் சீரீஸில் எந்தெந்த ஸ்மார்ட்போன்கள் ஆக்சிஜன் ஓஎஸ் 17 அப்பேட்டை பெறாமல் போகலாம்? ஒன்பிளஸ் 11ஆர் (OnePlus 11R), ஒன்பிளஸ் 10ஆர் (OnePlus 10R), ஒன்பிளஸ் 10டி (OnePlus 10T), ஒன்பிளஸ் 10 ப்ரோ (OnePlus 10 Pro) மற்றும் அதற்கும் முன்னர் வெளியான மாடல்கள்.
ஒன்பிளஸ் நோர்ட் சீரீஸில் எந்தெந்த ஸ்மார்ட்போன்கள் ஆக்சிஜன் ஓஎஸ் 17 அப்பேட்டை பெறாமல் போகலாம்? ஒன்பிளஸ் நோர்ட் 3 (OnePlus Nord 3) மற்றும் அதற்கும் முன்னர் வெளியான மாடல்கள், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4), ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் (OnePlus Nord CE 4 Lite) மற்றும் அதற்கும் முன்னர் வெளியான மாடல்கள்.
ஒன்பிளஸ் பேட் சீரீஸில் எந்தெந்த டேப்லெட்கள் ஆக்சிஜன் ஓஎஸ் 17 அப்பேட்டை பெறாமல் போகலாம்? ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) மற்றும் ஒன்பிளஸ் பேட் கோ (OnePlus Pad Go). மேல உள்ள மாடல்கள் எல்லாமே ஒரு அதிகாரப்பூர்வமற்ற பட்டியல் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருப்பினும் இவைகள் ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஓஎஸ் அப்டேட் கொள்கையை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், பெரிய வித்தியாசத்தை எதிர்பார்க்க முடியாது.
எனவே, உங்களிடம் இருக்கும் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் ஆனது மேலே உள்ள பட்டியலில் இருந்தால், அது ஆக்சிஜன் ஓஎஸ் 17 க்கு மேம்படுத்தப்படுவதற்கு வாய்ப்பில்லை. ஆக நீங்கள் வரும் நாட்களில் அல்லது மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் மாடலை வாங்கலாம். அப்படி செய்வதன் மூலம் எளிதாக, அடுத்த 6 ஆண்டுகளுக்கான சாஃப்ட்வேர் அப்டேட்களை பெறலாம்.
6 வருட சாஃப்ட்வே அப்டேட்களுக்கு தகுதியான லேட்டஸ்ட் ஒன்பிளஸ் டிவைஸ்களின் பட்டியல்:
ஒன்பிளஸ் 13 (OnePlus 13)
ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R)
ஒன்பிளஸ் 13எஸ் ( OnePlus 13s)
ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5)
ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4)
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ( OnePlus Nord CE 5)
ஒன்பிளஸ் பேட் 3 (OnePlus Pad 3)
உங்களிடம் இருக்கும் ஒன்பிளஸ் டிவைஸ் மேலே உள்ள பட்டியலில் இருந்தால், அது அறிமுகப்படுத்தப்பட்ட தேதியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு சாஃப்ட்வேர் அப்டேட்களை பெறும். இது முக்கிய ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களை குறிக்காது, மாறாக செக்யூரிட்டி பேட்ச்களை குறிக்கும். செக்யூரிட்டி பேட்ச்களில் புதிய அம்சங்கள் அல்லது யுஐ மாற்றங்கள் அடங்காது. ஆனால் அவைகள் ஆண்ட்ராய்டு ஓஎஸ் மற்றும் ஒன்பிளஸ் டிவைஸ்களில் காணப்படும் சமீபத்திய பாதிப்புகளுக்கான பேட்ச்களை கொண்டிருக்கும், அது டிவைஸை பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் வைத்திருக்க உதவும்.


Click it and Unblock the Notifications








