பேக் டூ பேக் ஆப்பு.. 10 Samsung மாடல்களை தொடர்ந்து Galaxy S21 சீரிஸ் ஓனர்களுக்கும் ஒரு பேட் நியூஸ்!
2025 ஆம் ஆண்டுடன் எந்தெந்த சாம்சங் (Samsung) ஸ்மார்ட்போன்களுக்கு சாஃப்ட்வேர் சப்போர்ட் (Software Support) முடிவடைகிறது என்கிற பட்டியல் வெளியான வேகத்தில், சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் (Galaxy S21 Series) ஸ்மார்ட்போன்களுக்கான சாஃப்ட்வேர் சப்போர்ட் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது!
கடந்த ஆண்டு வெளியான கேலக்ஸி எஸ்24 சீரீஸ்-க்கு 7 ஆண்டுகளுக்கு ஓஎஸ் அப்டேட் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதே நடைமுறை லேட்டஸ்ட் ஆக அறிமுகமான கேலக்ஸி எஸ்25 சீரீஸ் உடனும் தொடர்கிறது. பட்ஜெட்-விலை கேலக்ஸி ஏ16 5ஜி மாடலுக்கு கூட அதிகபட்சமாக 6 ஆண்டுகளுக்கான ஓஎஸ் அப்டேட் அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஃபிளாக்ஷிப்கள் மாடல்களாக இருந்தாலும் கூட சாம்சங்கின் பழைய ஸ்மார்ட்போன்கள் அதிர்ஷ்டசாலியாக இல்லை. குறிப்பாக 4 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமான் சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரீஸ். ஏனென்றால் சாம்சங் நிறுவனம் இந்த சீரீஸில் உள்ள ஸ்மார்ட்போன்களுக்கான ஓஎஸ் அப்டேட்களை குறைக்க தொடங்கி உள்ளது.
கேலக்ஸி எஸ்21 சீரிஸில் உள்ள கேலக்ஸி எஸ்21 (Galaxy S21), கேலக்ஸி எஸ்21 பிளஸ் (Galaxy S21 Plus) மற்றும் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா (Galaxy S21 Ultra) ஆகிய மாடல்களுக்கு மாதாந்திர அப்டேட் நிறுத்தப்பட்டுள்ளது. 9to5Google வழியாக வெளியான லேட்டஸ்ட் அறிக்கையின்படி, சாம்சங் அதன் செக்யூரிட்டி அப்டேட்ஸ் பக்கத்தில், கேலக்ஸி எஸ்21 சீரீஸை காலாண்டு அப்டேட்கள் பிரிவின் கீழ் சேர்த்துள்ளது
இதன் பொருள் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன்கள் ஆனது இனிமேல் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு மென்பொருள் புதுப்பிப்பை மட்டுமே பெறும், முன்பு போல் மாதாந்திர அடிப்படையில் பெறாது. ஆக இனிமேல் ஒரு வருடத்திற்கு கேலக்ஸி எஸ்21 சீரீஸ்-க்கு 4 அப்டேட்கள் மட்டுமே கிடைக்கும்.
நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் உடன் தொடங்கப்பட்டது, எனவே இந்த போன்களுக்கான கடைசி ஓஎஸ் வெர்ஷன் - ஆண்ட்ராய்டு 15 ஆக இருக்கும். செக்யூரிட்டி அப்டேட்களை பொறுத்தவரை 2026 ஆம் ஆண்டின் ஆரம்பம் வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் அதன் பழைய மாடல்களுக்கான மென்பொருள் ஆதரவை மாதாந்திரம் முதல் காலாண்டு அப்டேட்களாக குறைப்பது வழக்கமான விஷயம் தான். நல்லவேளையாக, இந்த மாற்றத்தில் கேலக்ஸி எஸ்21 எப்இ (Galaxy S21 FE) மாடல் சேர்க்கப்படவில்லை. அதாவது இந்த மாடல் தொடர்ந்து மாதாந்திர அப்டேட்களை பெறும்.
இந்த 2025 ஆம் ஆண்டில் சாம்சங்கின் சாஃப்ட்வேர் சப்போர்ட்-ஐ இழக்கும் ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கையும் ஏராளமாக உள்ளன. அப்படியாக 2025 ஆம் ஆண்டு உடன் சாம்சங் நிறுவனத்திடம் இருந்து மென்பொருள் ஆதரவை இழக்கும் அனைத்து கேலக்ஸி போன்களின் பட்டியல் இதோ:
1. சாம்சங் கேலக்ஸி ஏ02எஸ் (Samsung Galaxy A02s)
2. சாம்சங் கேலக்ஸி ஏ12 (Samsung Galaxy A12)
3. சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி (Samsung Galaxy S20 FE 5G)
4. சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ (Samsung Galaxy S20 FE)
5. சாம்சங் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா 5ஜி (Samsung Galaxy S20 Ultra 5G)
6. சாம்சங் கேலக்ஸி எஸ்20 (Samsung Galaxy S20 Ultra)
7. சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் 5ஜி (Samsung Galaxy S20 Plus 5G)
8. சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் (Samsung Galaxy S20 Plus)
9. சாம்சங் கேலக்ஸி எஸ்20 5ஜி (Samsung Galaxy S20 5G)
10. சாம்சங் கேலக்ஸி எஸ்20 (Samsung Galaxy S20)
இந்த பட்டியலில் சாம்சங் கேலக்ஸி டபுள்யூ21 5ஜி (Samsung Galaxy W21 5G) மாடலும் அடக்கம். இது சீனாவில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 2 5ஜி (Samsung Galaxy Z Fold 2 5G) ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷன் ஆகும். நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்டன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








