வெளியாகப்போவது ஐபோன் 8 இல்லை - ஐபோன் 10.!
ஐகல்சர் (iCulture) என்ற டச் நாட்டின் இணைய தளம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆப்பிள் நிருவனத்தின் 10-ஆம் ஆண்டு விழாவில் வெளியாகும் ஐபோன் ஆனது ஐபோன் 8-ஆக இருக்காது.
செப்டம்பர் 12-ஆம் தேதி ஆப்பிள் நிறுவனம் அதன் சமீபத்திய ஐபோன்களின் மமீதான றைப்பை எடுத்துக்கொள்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் பத்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியாகும் ஐபோன் பதிப்பை "ஐபோன் 8" என்ற பெயரில் ஊடகங்கள் அனைத்தும் உற்சாகமாய் பேசிக்கொண்டிருக்க, அக்கருவி ஏன் "ஐபோன் X" ஆக இருக்ககூடாதென்ற வினாவும் தற்போது எழுந்துள்ளது.

ஐகல்சர் (iCulture) என்ற டச் நாட்டின் இணைய தளம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆப்பிள் நிருவனத்தின் 10-ஆம் ஆண்டு விழாவில் வெளியாகும் ஐபோன் ஆனது ஐபோன் 8-ஆக இருக்காது. அது "ஆப்பிள் X" என்ற பெயரில் அதாவது ஆப்பிள் 10 என்ற பெயரில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது.
இந்த பெயர் மிகவும் அர்த்தமான ஒன்றாகவே தோன்றுகிறது. ஏனெனில் ஆப்பிள் அதன் 10-வது ஆண்டு நிறைவை இது குறிக்கிறது. மேலும் ஆப்பிள் நிறுவனம் இம்முறை மிகவும் புதிய மாடல் ஐபோனை அறிமுகப்படுத்தக்கூடும் என்றும் தகவல்கள் வந்துள்ளன. ஆக வெளியாகும் அடுத்த ஐபோனின் பெயர் ஐபோன் X என்று இருப்பின் ஆச்சரியப்படுவதற்கில்லை, ஒருவேளை அது நிறுவனத்தின் மிகவும் விருப்பமான ஒரு பெயராக கூட இருக்கலாம்.

இது உண்மையெனில் வருகிற செப்டம்பர் 12-ஆம் தேதியன்று ஐபோன் 7எஸ், ஐபோன் 7எஸ் பிளஸ் மற்றும் ஐபோன் 10 ஆகிய கருவிகளின் அறிமுகம் நிகழ்ந்து. செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் முன்பதிவுகளுக்கு திறந்து விடப்பட்டு, ஏற்றுமதியை செப்டம்பர் 22 அன்று முதல் ஆரம்பிக்க வேண்டும்.
ஆப்பிள் பார்க்கில் நடக்கும் பத்திரிகையாளர் மாநாட்டில், கருவிகள் சார்ந்தஹ் மற்ற விவரங்களை நிறுவனம் வெளியிடும். இந்த ஆண்டு வெளியாகும் ஐபோன் ஆனது 1000 டாலர்கள் என்ற விலை வரம்பை உடைக்க வாய்ப்பு உள்ளது. இது சந்தையில் உள்ள மிகவும் விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கும் போதிலும், ஆய்வாளர்களின் கருத்துப்படி ஆப்பிள் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான ஐபோன்களில் ஒன்றாக இது இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications