Home
Mobile

அடிச்சாடும் புது OnePlus போன்.. எதிர்பார்த்த 200MP பெரிஸ்கோப் இல்ல ஆனா 9000mAh பேட்டரி, 120W சார்ஜிங் இருக்கு!

200எம்பி பெரிஸ்கோப் கேமரா, 185 ஹெர்ட்ஸ் டிஸ்பிளே, 9000mAh பேட்டரி என நம்பர்ஸ் அடிப்படையில் முழு வீச்சில் இறங்கி அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட, ஒன்பிளஸ் நிறுவனத்தின் 2026 பிளாக்ஷிப் மாடல் குறித்த ஒரு லேட்டஸ்ட் லீக் ஆனது - புதிய வகை தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

அந்த மாடல் ஒன்பிளஸ் 16 (OnePlus 16) ஸ்மார்ட்போன் ஆகும். ஆரம்பத்தில் இருந்தே இது 200எம்பி பெரிஸ்கோப் கேமராவுடன் வரும் என்றுதான் தகவல்கள் வெளியாகி கொண்டிருந்தன. ஆனால் அந்த தகவல்களுக்கு முரணான ஒரு புதிய லீக் வெளியாகியுள்ளது. முன்னதாக ஒன்பிளஸ் 16 ஆனது 50எம்பி ப்ரைமரி கேமராவுடன் 200எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

புது OnePlus போன்.. 200MP பெரிஸ்கோப் இல்ல ஆனா 9000mAh பேட்டரி இருக்கு!

ஆனால் தற்போது டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷனின் புதிய லீக் முற்றிலும் மாறுபட்ட விவரங்களை பரிந்துரைக்கிறது. சமீபத்திய தகவலின்படி, ஒன்பிளஸ் 16 ஆனது 200எம்பி ப்ரைமரி கேமரா, 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 50எம்பி அல்ட்ரா-வைட் சென்சார் ஆகியவற்றுடன் வரக்கூடும்.

இந்த மாற்றம் குறிப்பிடத்தக்கது, ஏனெனில் இது போனின் புகைப்பட முன்னுரிமைகளை முற்றிலுமாக மாற்றுகிறது. 200எம்பி ப்ரைமரி சென்சார் ஒட்டுமொத்த படத் தரம், விவரங்களை தக்கவைத்தல் மற்றும் குறைந்த ஒளி செயல்திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும். ஆனால் 200எம்பி டெலிஃபோட்டோ அமைப்பு இடம்பெற்றால் - நீண்ட தூர ஜூம் திறன்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். இது ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனை, ஒப்போ (OPPO) மற்றும் விவோ (Vivo) போன்ற போட்டியாளர்களுக்கு இணையாக வைக்கும்.

நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது ஏற்கனவே 3.5எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50எம்பி டெலிஃபோட்டோ கேமராவை வழங்குகிறது. எனவே, ஒன்பிளஸ் அதே சென்சாரை பயன்படுத்தத் திட்டமிடுகிறதா அல்லது மேம்படுத்தப்பட்ட ஒன்றை பயன்படுத்தத் திட்டமிடுகிறதா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால் ஒன்பிளஸ் 15 இல் உள்ள 50எம்பி ப்ரைமரி கேமராவுடன் ஒப்பிடும் போது, 200எம்பி ப்ரைமரி சென்சார் ஒரு நல்ல மேம்படுத்தலாகவே இருக்கும்.

கேமரா குறித்த விவாதம் மற்றும் குழப்பங்களை தாண்டி, எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்கள் - ஒன்பிளஸ் 16 மாடலை - ஒரு லட்சியமிக்க பிளாக்ஷிப் போனாகவே காட்டுகின்றன. ஒன்பிளஸ் 16 ஆனது குவால்காமின் அடுத்த தலைமுறை ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 ப்ரோ சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது BOE வழங்கும் 6.78-இன்ச் LTPO OLED பேனல், மிக மெல்லிய 1 மிமீ சமச்சீர் பெசல்களை கொண்டிருக்கலாம். இந்த டிஸ்பிளேவின் ரெஃப்ரெஷ் ரேட் 185Hz-ஐ எட்டும் என்றும், மேலும் 240Hz வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. இது உண்மையாக இருந்தால், இன்றைய பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் பொதுவாக காணப்படும் 120Hz மற்றும் 144Hz பேனல்களை விட இது அதிகமாக இருக்கும்

பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் ஆனது 120W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன், ஒரு பிரம்மாண்டமான 9000mAh பேட்டரி கொண்டிருக்கும் என்று வதந்திகள் தெரிவிக்கின்றன. தற்போது, ​​ஒரு சில பிளாக்ஷிப் மாடல்கள் மட்டுமே பெரிய பேட்டரிகளை வழங்குகின்றன. அவற்றில் 7300mAh திறன் கொண்ட பேட்டரியை கொண்டிருக்கும் ஒன்பிளஸ் 15 மாடலும் அடங்கும்.

கிஸ்பாட்டின் கருத்து: யாரெல்லாம் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனின் வருகைக்காக காத்திருக்கலாம். நீண்ட பேட்டரி லைஃப்பை விரும்பும் பயனர்கள் ஒன்பிளஸ் 16 மாடலை தொடர்ந்து கவனிக்கலாம், குறிப்பாக அதன் 9,000mAh திறன் குறித்த கூற்று உண்மையாக இருந்தால் - மொபைல் கேமர்கள் மற்றும் அதிக நேரம் மொபைல் பயன்படுத்துபவர்கள் இந்த ஸ்மார்ட்பணிந் பேட்டரியால் கணிசமாக பயனடையலாம்.

கேமரா குறித்த விவரங்கள் இன்னும் தெளிவாக இல்லாததால், இப்போதைக்கு ஒரு முடிவுக்கு வருவதது கடினம். ஒருவேளை நீங்கள் தற்போது ஒன்பிளஸ் 13 அல்லது அதற்கு முந்தைய மாடலை பயன்படுத்தி, கேமரா ஜூமிற்கு முன்னுரிமை அளித்தால், 200எம்பி டெலிஃபோட்டோ கேமரா குறித்த வதந்தி உறுதி செய்யப்படும் வரை காத்திருக்கலாம். ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் ஆனது 2026 செப்டம்பரில் சீனாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து, அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் உலக அளவிலும், இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படலாம்.

Best Mobiles in India

English summary
No 200MP periscope telephoto camera in OnePlus 16 New Leak Suggests 50MP Lens
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X