ரசிகருக்குனு விழா நடத்தும் Mi: எந்த ஸ்மார்ட்போன் எடுத்தாலும் உச்சக்கட்ட தள்ளுபடி! மிஸ் பண்ணாதீங்க..
ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் இல் இயங்கும் சியோமி 12 ப்ரோ மற்றும் மிட் ரேன்ஜ் விலையில் கிடைக்கும் ரெட்மி கே50ஐ ஸ்மார்ட்போன்கள் ரூ.8000 வரையிலான தள்ளுபடி விலையில் தற்போது கிடைக்கிறது. டிசம்பர் 21 ஆம் தேதி வரை நடக்கும் நம்பர் 1 Mi ரசிகர் திருவிழாவின் ஒருபகுதியாக இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி நிறுவனம் தனது ஆண்டு இறுதி விற்பனை நிகழ்வாக "நம்பர் 1 Mi பேன் ஃபெஸ்டிவல்" விழாவை அறிவித்துள்ளது. இந்த விற்பனை நிகழ்வு இந்தியாவில் டிசம்பர் 21 வரை நடக்கிறது. இந்த தினங்களில் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்கள் மற்றும் அக்சசரிஸ்களுக்கு பெரும் தள்ளுபடியை வழங்குகிறது.
குறிப்பாக சியோமி நிறுவனம் சியோமி 12 மற்றும் ரெட்மி கே50ஐ ஸ்மார்ட்போனுக்கு அதீத தள்ளுபடியை வழங்குகிறது. அதாவது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 இல் இயங்கும் சியோமி 12 ப்ரோ மற்றும் மிட் ரேன்ஜ் விலை ரெட்மி கே50ஐ ஸ்மார்ட்போன்கள் ரூ.8000 வரை தள்ளுபடியை பெற்றிருக்கிறது. சியோமி இந்தியாவின் எம்ஐ ஆன்லைன் ஸ்டோரில் வாடிக்கையாளர்கள் இந்த தள்ளுபடி சலுகைகளை அனுபவிக்கலாம்.

ப்ரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வாங்கத் திட்டமிட்டிருந்தால் சியோமி 12 ப்ரோ ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.55,999 எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வேரியண்ட் ரூ.59,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு வேரியண்ட்களுக்கும் சியோமி தள்ளுபடி அறிவித்திருக்கிறது.
அதாவது இந்த இரண்டு வேரியண்ட் ஸ்மார்ட்போனையும் எந்தவொரு டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட்களை பயன்படுத்தி வாங்கினாலும் ரூ.8000 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி சியோமி 12 ப்ரோ மாடலின் 8 ஜிபி ரேம் வேரியண்ட்டை ரூ.47,999 எனவும் 12 ஜிபி ரேம் வேரியண்ட்டை ரூ.51,999 எனவும் வாங்கலாம்,
Redmi K50i ஸ்மார்ட்போனும் தற்போது எம்ஐ ரசிகர் தின விற்பனையில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதன்படி 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.23,999 எனவும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.26,999 என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், HDFC அல்லது SBI கார்ட்கள் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.3000 வரை தள்ளுபடியை பெறலாம். அதன்படி ரெட்கமி கே50ஐ இன் 6ஜிபி ரேம் ரூ.20,999 எனவும் 8 ஜிபி ரேம் ரூ.23,999 எனவும் வாங்கலாம்.

சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.73-இன்ச் 2கே AMOLED டிஸ்ப்ளே வசதியைக் கொண்டிருக்கிறது. அதேபோல் 3200 x 1440 பிக்சல் தீர்மானம், 480 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 1500 நிட்ஸ் ப்ரைட்னஸ், டால்பி விஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் மற்றும் எச்டிஆர் 10 பிளஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இதில் இருக்கிறது.
சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் வசதி உள்ளது. ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனுக்கு தேவையான சிறந்த செயல்திறன் கொண்ட சிப்செட் இதுவாகும். இதில் 50எம்பி Sony IMX707 பிரைமரி சென்சார் + 50எம்பி Samsung JN1 அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் இருக்கிறது.
இந்த சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4600 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. சார்ஜிங் ஆதரவாக 120 வாட் பாஸ்ட் சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் , 10 வாட் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு என பல்வேறு சிறப்பான அம்சங்களை இதில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications