ஆன்ட்ராய்டு தொழில் நுட்பத்தில் புதிய நியூ டெக் ஸ்மார்ட்போன்!

கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் கியூ என்-106 ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த ஸ்மார்ட்போனாக இருப்பினும் அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் முக்கிய பங்கு பெறுகிறது.
அதன் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு வி2.2 ஃபிரையோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையும் வழங்கும். 450 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஏஆர்எம்9 பிராசஸரும் இந்த ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தகவல்களை இன்னும் வேகமாக கொடுக்கும்.
இதில் உள்ள 2 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் 1600 X 1200 கேமரா துல்லியத்தினை பெறலாம். இதன் மைக்ரோஎஸ்டி ஸ்லாட் 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ள உதவும். ஜிபிஆர்எஸ், வைபை, புளூடூத், யூஎஸ்பி போன்ற தகவல் பரிமாற்றங்களை இந்த ஸ்மார்ட்போனின் மூலம் எளிதாக பெறலாம்.
எல்ஐ-அயான் 1,000 எம்ஏஎச் ஸ்டான்டர்டு பேட்டரியும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் 48 மணி நேரம் ஸ்டான்-பை டைமும், டாக் டைமும் எளிதாக கிடைக்கும்.
தேவையான அப்ளிக்கேஷன்களை டவுன்லோட் செய்து கொள்ள உதவும் இந்த ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் விலை இன்னும் சரிவர வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications