ஓங்கி அடிச்ச OnePlus.. 6200mAh பேட்டரி, 100W சார்ஜிங் உடன் இன்னொரு புது போன்.. என்ன மாடல்.. எப்போது அறிமுகம்?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் ஒரு முடிவோடு தான் இருக்கிறது போல! கடந்த ஜூன் மாதம் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் (OnePlus Nord CE4 Lite) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 (OnePlus Nord CE4) மாடல்களை அறிமுகம் செய்த வேகத்தில் கடந்த ஜூலை மாதத்தில் ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) ஸ்மார்ட்போனையும் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதெல்லாம் போதாது என்று வருகிறஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று ஒன்பிளஸ்ஓப்பன் அபெக்ஸ் எடிஷன் (OnePlus Open Apex Edition) என்கிற ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
இதற்கிடையில் தான் 6200mAh பேட்டரி, 100W சார்ஜிங், 50MP கேமரா போன்ற முக்கிய அம்சங்களுடன் இன்னொரு புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதென்ன மாடல்? எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? ஒன்பிளஸ் நிறுவனம் அதன் அடுத்த தலைமுறை ஏஸ்-பிராண்டட் மாடலான ஒன்பிளஸ் ஏஸ் 5 (OnePlus Ace 5) ஸ்மார்ட்போனில் பணியாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் ஏஸ் சீரீஸின் கீழ் அறிமுகம் செய்யப்படும் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆர் சீரிஸின் கீழ் அறிமுகம் செய்யப்படும் என்பதால், இது சீன அறிமுகத்தை தொடர்ந்து இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
இந்தியாவில் இது ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்படலாம. ஏனென்றால் ஒன்பிளஸ் ஏஸ் 3 (OnePlus Ace 3) ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) என்கிற பெயரின்கீழ் அறிமுகமானது. இதே வழக்கத்தை நாம் ஒன்பிளஸ் ஏஸ் 5 மாடலிலும் எதிர்பார்க்கலாம்.
என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும் ? ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்லது ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் ஆனது 6.78 இன்ச் 8டி எல்டிபிஓ டிஸ்பிளேவை பேக் செய்யும் என்று கூறப்படுகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசல்யூஷன் மற்றும் மைக்ரோ-கர்வேசசர் டிசைனும் (Micro-curvature design) இடம்பெறலாம்.
மேலும் ஒன்பிளஸ் ஏஸ் 5 ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டரியைப் பொறுத்தவரை, இது 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,200mAh டூயல்-செல் பேட்டரியை கொண்டிருக்கலாம். கேமராக்களை பொறுத்தவரை இது ஒரு பெரிய கேமரா சென்சார் உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை கொண்டிருக்கலாம். கடைசியாக இதில் அலெர்ட் ஸ்லைடரையும் கொண்டிருக்கும்.
எப்போது அறிமுகமாகும்? ஒன்பிளஸ் ஏஸ் 5 ஸ்மார்ட்போன் ஆனது ஒன்பிளஸ் 13 உடன் இணைந்து 2024 அக்டோபர் அல்லது நவம்பரில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் ஒன்பிளஸ் ஏஸ் 5 மாடலானது ஒன்பிளஸ் 13ஆர் ஆக ரீபிரான்டட் செய்யப்பட்டு ஒன்பிளஸ் 13 மாடலுடன் சேர்ந்து 2025 ஜனவரி மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.
என்ன விலைக்கு வரும்? இந்தியாவில் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் ரூ 45,990 ஆக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுகையில் உள்ள ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.62,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று யூகிக்கப்படுகிறது . மிகப்பெரிய அப்டேட்கள் இருக்கும் பட்சத்தில் இந்த விலை ரூ.70,000-ஐ கூட தாண்டலாம்.
ஒன்பிளஸ் ஓப்பன் அபெக்ஸ் எடிஷன்: இது ஒன்பிளஸ் ஓப்பன் (OnePlus Open) ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் (Special Edition) ஆக ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது ஒன்பிளஸ் ஓப்பன் அபெக்ஸ் எடிஷன் (OnePlus Open Apex Edition) என்று அழைக்கப்படும். இது ஹசல்பிளாட் 590சிடபுள்யூ 60 இயர்ஸ் விக்டர் ரெட் எடிஷனுக்கு (Hasselblad 503CW 60 Years Victor Red Edition) மரியாதை செலுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது .
வழக்கமான ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனிற்கும் இதற்கும் அம்சங்கள் அடிப்படையில் பெரிய வேறுபாடுகள் இருக்காது. கலர் மற்றும் சிலவடிவமைப்பு மட்டுமே வித்தியாசமாக இருக்கும். ஒன்பிளஸ் ஓப்பன் அபெக்ஸ் எடிஷன் "பிரீமியம் வீகன் லெதர்" பினிஷ் உடன் கிரிம்சன் ரெட் கலரில் அறிமுகம் செய்யப்படும். அலெர்ட் ஸ்லைடரில் வைரம் போன்ற வடிவமும், ஆரஞ்சு நிற அசென்ட்களும் இடம்பெறும்.


Click it and Unblock the Notifications








