இது என்ன புது விதமான ஏமாத்து வேலையா இருக்கு? பழைய 2018 டிஸ்பிளேவுடன் ஒரு புது iPhone!

|

ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட சிறந்த தரம் மற்றும் அதிகமான பாதுகாப்பு வசதிகளை தன் சாதனங்களுக்கு வழங்குகிறது ஆப்பிள் நிறுவனம்.

ஐபோன் எஸ்இ 4

ஐபோன் எஸ்இ 4

அதேபோல் இந்நிறுவனம் ஐபோன் எஸ்இ (2022) மாடலை இந்தியாவில் ரூ.43,900-விலையில் அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த போன் தரமான அம்சங்களுடன் வெளிவந்தது. மேலும் இதை விட தரமான அம்சங்களுடன் ஐபோன் எஸ்இ 4 மாடல் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

சென்னையை சேர்ந்தவர் தான் காரணமா? எலான் மஸ்க்கிற்கு உதவும் ஸ்ரீராம் கிருஷ்ணன் யார்?சென்னையை சேர்ந்தவர் தான் காரணமா? எலான் மஸ்க்கிற்கு உதவும் ஸ்ரீராம் கிருஷ்ணன் யார்?

 2024-ம் ஆண்டு அறிமுகம்

ஆன்லைனில் கசிந்த தகவலின்படி,ஆப்பிள் ஐபோன் எஸ்இ 4 மாடல் வரும் 2024-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த போனின் சில அம்சங்கள் தற்போது ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி இப்போது விரிவாகப் பார்ப்போம்.

Samsung, Redmi-லாம் ஷாக் ஆகுற விலையில்.. இந்தியாவில் அறிமுகமான NOKIA-வின் புதிய 5G போன்!Samsung, Redmi-லாம் ஷாக் ஆகுற விலையில்.. இந்தியாவில் அறிமுகமான NOKIA-வின் புதிய 5G போன்!

5.7 இன்ச் அல்லது 6.1-இன்ச்

5.7 இன்ச் அல்லது 6.1-இன்ச்

ஆப்பிள் ஐபோன் எஸ்இ 4 ஆனது 5.7 இன்ச் அல்லது 6.1-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாட்ச் வடிவமைப்புடன் இந்த போன் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

உங்கள நம்பி 5G போன் வாங்குனதுக்கு.. நல்லா வச்சி செஞ்சிட்டீங்க! கதறும் Jio, Airtel வாசிகள்! ஏன்?உங்கள நம்பி 5G போன் வாங்குனதுக்கு.. நல்லா வச்சி செஞ்சிட்டீங்க! கதறும் Jio, Airtel வாசிகள்! ஏன்?

பழைய டிஸ்பிளே

பழைய டிஸ்பிளே

சமீபத்தில் iPhone SE 4 இன் வடிவமைப்பு ரெண்டர்கள் iPhone XR-ஐ போன்ற வடிவமைப்புடன் வெளிவந்தன. அதாவது iPhone XR டிஸ்பிளே போன்றே இந்த iPhone SE 4 அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இதற்கு பதிலாக வேறு ஒரு தனித்துவமான டிஸ்பிளேவுடன் ஐபோன் எஸ்இ 4
மாடல் வெளிவந்தால் நன்றாக இருக்கும். குறிப்பாக iPhone SE 4 மாடல் பழைய டிஸ்பிளே வசதியுன் வெளிவந்தால் ஒரு புது விதமான ஏமாத்து வேலையாக இருப்பது போன்றுதான் தெரியும். எனவே ஐபோன் எஸ் 4 மாடலின் டிஸ்பிளே பகுதிக்கு ஆப்பிள் நிறுவனம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

பட்ஜெட் விலை

ஆனாலும் ஐபோன் எஸ்இ 4 மாடல் ஆனது Face ID, மேம்பட்ட சிப் வசதி மற்றும் அசத்தலான கேமரா அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஐபோன் எஸ்இ 4 மாடல்.

மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2022 மாடலின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

2022 இன் கடைசி கிரகணம்! நவ.,8 ரெடியா இருங்க.. நேரம் இதுதான்! மறக்காம இதை பண்ணுங்க!2022 இன் கடைசி கிரகணம்! நவ.,8 ரெடியா இருங்க.. நேரம் இதுதான்! மறக்காம இதை பண்ணுங்க!

Apple iPhone SE 2022 சிறப்பம்சங்கள்

Apple iPhone SE 2022 சிறப்பம்சங்கள்

Apple iPhone SE 2022 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த மாடல் ஐபோன் ஆனது 4.7 இன்ச் ரெடினா டிஸ்ப்ளே மற்றும் பின்புற கண்ணாடியுடன் கிடைக்கிறது. குறிப்பாக இந்த போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக உள்ளது.

1 இல்ல 2 இல்ல.. நச்சுனு 9 புதிய Phone-கள்! இந்த நவம்பர் மாதம் - நல்ல போன்களுக்கான மாதம்!1 இல்ல 2 இல்ல.. நச்சுனு 9 புதிய Phone-கள்! இந்த நவம்பர் மாதம் - நல்ல போன்களுக்கான மாதம்!

ஐபி67 மதீப்பீடு

ஐபி67 மதீப்பீடு

ஃபேஸ் அன்லாக் ஆதரவும் இந்த Apple iPhone SE 2022 மாடலில் இருக்கிறது. ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரும் உள்ளது. இந்த ஐபோனானது டஸ்ட் மற்றும் வாட்டர் எதிர்ப்புக்கான ஐபி67 மதீப்பீடு பெற்றிருக்கிறது. மேலோட்டமாக தண்ணீர் தெறிப்பதில் இருந்து இந்த ஐபோன் மாடல் பாதுகாக்கப்படுகிறது.

சீன கம்பெனிகளின் சீன கம்பெனிகளின் "சுமார்" TV-களை துவம்சம் செய்யும் SONY-யின் புதிய 43-இன்ச் ஸ்மார்ட் டிவி!

ஏ15 பயோனிக் சிப்செட்

ஏ15 பயோனிக் சிப்செட்

மேலும் ஐபோன் SE 2022 ஆனது ஏ15 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் ஐஓஎஸ் 15 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஐபோன் மாடல். ஐபோன் எஸ்இ 2022 ஆனது ஸ்மார்ட் HDR 4, ஃபோட்டோகிராஃபிக் ஸ்டைல்கள், டீப் ஃப்யூஷன் மற்றும் போர்ட்ரெய்ட் பயன்முறை போன்ற பல ஆதரவுகளைக் கொண்டிருக்கிறது.

 12 எம்பி கேமரா

12 எம்பி கேமரா

குறிப்பாக ஐபோன் எஸ்இ 2022 பின்புறத்தில் 12 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஐபோன் மாடல் ஆனது 5ஜி இணைப்பு ஆதரவைக் கொண்டிருக்கிறது.தற்போது இந்த போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Next iPhone model may pack the same display as the iPhone XR which launched in 2018 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X