அள்ளுது அமேசான்.. இப்போ ரூ.7199 தான்.. LAVA-வின் புது 5G போன் மீது திடீர் டிஸ்கவுண்ட்.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன லாவா (LAVA) நிறுவனமானது, அமோஎல்இடி டிஸ்பிளே உடனான மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போனை (லாவா பிளேஸ் அமோஎல்இடி 5ஜி) அறிவித்துள்ள மறுகையில், கடந்த ஜூன் மாதம் அறிமுகமான இந்நிறுவனத்தின் பட்ஜெட்-விலை 5ஜி ஸ்மார்ட்போன் மீது அட்டகாசமான அமேசான் டிஸ்கவுண்ட் அணுக கிடைக்கிறது.
என்ன மாடல்? அது லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி (Lava Storm Lite 5G) ஸ்மார்ட்போன் ஆகும். இது டைமன்சிட்டி 6400 சிப்செட் (Dimensity 6400 SoC) உடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள முதல் ஸ்மார்ட்போனாகும். இது மொத்தம் இரண்டு ரேம் + ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் கடந்த ஜூன் 2025 இல் இந்தியாவில் அறிமுகமானது.

எவ்வளவு டிஸ்கவுண்ட்? லாவா ஸ்ட்ராம் லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 4GB ரேம் மற்றும் 64GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.7999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அமேசான் இந்தியா (Amazon India) வலைதளத்தில் கிடைக்கும் டிஸ்கவுண்ட் வழியாக, தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை கணிசமாக குறைந்துள்ளது.
அமேசான் இந்தியா வலைத்தளத்தில் வங்கி தள்ளுபடிகள் (Bank Discounts) மூலம் லாவா ஸ்ட்ராம் லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் விலையில் இருந்து ரூ.800 குறைக்க முடிகிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் விலையை ரூ.7,199 ஆக குறைக்கலாம். ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை காஸ்மிக் டைட்டானியம் மற்றும் அஸ்ட்ரா ப்ளூ ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் வாங்கலாம்.
என்னென்ன அம்சங்கள்? டிஸ்பிளேவை பொறுத்தவரை லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.75-இன்ச் HD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை முன்னரே குறிப்பிட்டபடி இது மீடியாடெக் டைமன்சிட்டி 6400 சிப்செட்டால் இயக்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் AnTuTu இயங்குதளத்தில் 420,000+ புள்ளிகளை பெற்றதுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது இந்த விலை வரம்பில் இது ஒரு நல்ல அன்டுடு பாயிண்ட்ஸ் ஆகும். கேமராக்களை பொறுத்தவரை இது 50எம்பி ப்ரைமரி ரியர் கேமராவையும், முன்புறத்தில் 5MP செல்பீ சென்சாரையும் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப்பில் எச்டிஆர் மோட், போர்ட்ரெய்ட் மோட் ஆகிய ஆதரவும் உண்டு. மேலும் டைம்-லேப்ஸ் கேப்ஷர் ஆதரவும் உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இது 18W ஃபாஸ்ட்-சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. சுவாரசியமாக இந்த ஸ்மார்ட்போன் பிங்கர் பிரிண்ட் லாக்கிற்க்கான ஆதரவையும் கொண்டுள்ளது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள லாவா பிளேஸ் அமோஎல்இடி 5ஜி ஸ்மார்ட்போன் விலை விவரங்கள்: லாவா நிறுவனத்தின் வலைதளத்தில் - லாவா பிளேஸ் அமோஎல்இடி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டைட்டானியம் கிரே மற்றும் ஸ்டார்லைட் பர்பிள் ஆகிய 2 கலர்களில் பட்டியலிடப்பட்டு உள்ளது. ஆனால் விலை மற்றும் விற்பனை தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை; விரைவில் இந்தியா முழுவதும் விற்பனைக்கு வரலாம்.
லாவா பிளேஸ் அமோஎல்இடி 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் FHD+ 3டி கர்வ்டு-எட்ஜ் அமோஎல்இடி டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300 chipset) சிப்செட்
- ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ன் ப்ளோட்வேர்-ப்ரீ வெர்ஷன்
- 4GB, 6GB மற்றும் 8GB ஆகிய மூன்று ரேம் ஆப்ஷன்ஸ்; முறையே 4GB, 6GB மற்றும் 8GB விர்ச்சுவல் ரேம்
- 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ்
-டூயல் ரியர் கேமரா செட்டப்
- 64 மெகாபிக்சல் சோனி சென்சார்
- LED ஃபிளாஷ் கொண்ட 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை லென்ஸ்
- 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5,000mAh பேட்டரி


Click it and Unblock the Notifications








