Home
Mobile

ஆளுக்கு 2 ஆர்டர்.. ரூ.6000 பட்ஜெட்டில் விற்பனை ஆரம்பித்த புது Redmi போன்.. நம்பி வாங்க நச்சுனு 4 காரணங்கள்!

சீனாவை சேர்ந்த ரெட்மி (Redmi) நிறுவனத்திற்கும் இந்தியர்களுக்கும் இடையே உள்ள பிணைப்பை பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால்.. ரெட்மிக்கு ஆரம்பத்தில் இருந்தே பட்ஜெட் விலை போன்களை கொடுத்து-கொடுத்து பழகிவிட்டது; இந்தியாவில் உள்ள பட்ஜெட் வாசிகளுக்கு அதை வாங்கி-வாங்கி பழகிவிட்டது!

அப்படியாக கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி ஏ2 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த சீரீஸின் கீழ் ரெட்மி ஏ2 (Redmi A2) மற்றும் ரெட்மி ஏ2 பிளஸ் (Redmi A2 Plus) என மொத்தம் 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

ரூ.6000 பட்ஜெட்டில் விற்பனை ஆரம்பித்த புது Redmi போன்!

அந்த அறிமுகத்தின் போது ரெட்மி ஏ2 ஸ்மார்ட்போனின் 2ஜிபி ரேம் + 32ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் மட்டுமே வெளியானது. அது ஏற்கனவே அமேசான் இந்தியா வலைத்தளம், ஷாவ்மீயின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், எம்ஐ ஹோம் ஸ்டோர்கள் மற்றும் பிற பார்ட்னர் ரீடெய்ல் ஸ்டோர்களின் வழியாக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையில், சில நாட்களுக்கு முன்னர் ரெட்மி ஏ2 மாடலின் புதிய 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அது இன்று (அதாவது ஜூன் 20) முதல் இந்திய விற்பனையை தொடங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் என்ன? இதில் என்னென்ன அம்சங்கள் உள்ளன? இதை நம்பி வாங்கலாமா? இதோ விவரங்கள்:

விலை மற்றும் விற்பனை விவரங்கள்: ரெட்மி ஏ2 ஸ்மார்ட்ப்பனின் 2ஜிபி + 64ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.6799 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமேசான்.இன், எம்ஐ.காம் வழியாக ஏற்கனவே வாங்க கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் பிளாக், லைட் க்ரீன் மற்றும் லைட் ப்ளூ என்கிற 3 கலர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

முக்கிய அம்சங்கள்: ரெட்மி ஏ2 ஸ்மார்ட்போனானது 6.52 இன்ச் எச்டி பிளஸ் டாட் டிராப் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மீடியாடெக் ஹீலியோ ஜி36 சிப்செட் (MediaTek Helio G36 SoC) மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் 1டிபி வரையிலான மைக்ரோஎஸ்டி கார்டிற்கான ஆதரவும் உள்ளது.

ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் (Android 12 Go Edition) மூலம் இயங்கும் ரெட்மி ஏ2 ஸ்மார்ட்போனானது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 8-மெகாபிக்சல் மெயின் கேமரா + க்யூவிஜிஏ கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக இது 10W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.

நம்பி வாங்க 4 காரணங்கள்: முதல் மற்றும் முக்கிய காரணம் - ரூ.7000 க்குள் வாங்க கிடைக்கும் சிறந்த போன்களில் இதுவும் ஒன்றென கண்களை மூடிக்கொண்டு கூறலாம்; இரண்டாவது காரணம் - இது பெரிய பேட்டரியை கொண்டுள்ளது; மூன்றாவது காரணம் - 1டிபி வரையிலான மைக்ரோஎஸ்டி கார்ட்டை ஆதரிக்கிறது. நான்காவது காரணம் - இது டூயல் சிம் ஆதரவை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Newly Launched 64GB Storage Variant of Redmi A2 Smartphone Started Its India Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X