அசுஸ் இன் அடுத்த பட்ஜெட் விலை "சூப்பர்" ஸ்மார்ட் போன்.!
முன்னணி நிறுவனமான அசுஸ் நிறுவனம், அக்டோபர் 17 ஆம் தேதி இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது.
முன்னணி நிறுவனமான அசுஸ் நிறுவனம், அக்டோபர் 17 ஆம் தேதி இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது.
அசுஸ் நிறுவனம் வெளியிட இருக்கும் புதிய ஸ்மார்ட் போன் குறித்த விபரங்கள் இன்னும் சரியாக தெரியவில்லை, இருப்பினும் அசுஸ் நிறுவனம் நிச்சயம் இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிடும் என்ற தகவல் வட்டாரம் அறிவித்துள்ளது.

அசுஸ் நிறுவனம் அறிமுகம் செய்த அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட் போன் அமோக வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, இந்திய சந்தையில் தனது அடுத்த இரண்டு புது மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது.
அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட் போன்னினை தொடர்ந்து இந்திய சந்தையில், அசுஸ் மேக்ஸ் ப்ரோ எம்1 லைட் என்ற பெயரில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய மாடல் ஸ்மார்ட் போன் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், இவை ரெட்மி 6 சீரிஸ் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் அசுஸ் ஜென்போன் ப்ரோ எம்2 மற்றும் ஜென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போன்கள் சான்றளிக்கும் வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது.
இந்த புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் 6 ஜி.பி. அல்லது 8 ஜி.பி. ரேம் வசதி கொண்டிருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர் மற்றும் இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஸ்டாக் ஆன்ட்ராய்டு இயங்குதளத்துடன் இயங்குமென்றும் தெரியவந்துள்ளது. கூடுதல் சிறப்பாகஇந்த ஸ்மார்ட் போன்கள் அனைத்தும் 18:9 முழு இன்பினிட்டி கொண்ட நாட்ச் டிஸ்ப்ளே வசதியுடன் களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications