Home
Mobile

வெளியான 2வது வாரத்திலேயே ரூ.2000 விலை குறைப்பு! SLIM டிசைன், 12GB ரேம், 2TB ஸ்டரோஜ், 33W SuperVOOC சார்ஜிங்!

கடந்த டிச.14 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமான ஒரு லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனின் மீது.. அதாவது அறிமுகமான இரண்டாவது வாரத்திலேயே ரூ.2000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினால்.. உங்களில் சிலர் "மொக்கையான மாடலாக இருக்கலாம்!" என்று கமெண்ட் அடைப்பீர்கள். அப்படி தானே?

ஆனால் உண்மை அதற்கு நேர்மாறாக உள்ளது. அறிமுகமான வேகத்தில் ரூ.2000 தள்ளுபடியை பெற்றுள்ள ஸ்மார்ட்போன் ஆனது ஸ்லிம் டிசைன், 12ஜிபி வரையிலான ரேம், 2டிபி வரையிலான இன்டர்னல் ஸ்டரோஜ், 33W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. அதென்ன மாடல்? இதோ விவரங்கள்:

வெளியான 2வது வாரத்திலேயே ரூ.2000 விலை குறைப்பு!

ரூ.2000 தள்ளுபடியை பெற்றுள்ளது ரியல்மி சி67 5ஜி (Realme C67 5G) ஸ்மார்ட்போன் தான். இது கடந்த டிசம்பர் 14 ஆம் தேதியன்று 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் இந்தியாவில் அறிமுகமானது. பேஸிக் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்ட்ரோரேஜ் ஆப்ஷன் ரூ.13,999 க்கு அறிமுகமானது. தற்போது இந்த ஸ்டோரேஜ் ஆப்ஷன் மீது இரண்டு தள்ளுபடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் தள்ளுபடி சலுகையானது ஒரு பிளாட் டிஸ்கவுண்ட் (Flat Discount) ஆகும். இதன் கீழ் ரியல்மி சி67 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கும் போது ரூ.1,000 நேரடி தள்ளுபடி கிடைக்கும். இரண்டாவது தள்ளுபடி சலுகையானது ஒரு பேங்க் கேஷ்பேக் ஆபர் (Bank Cashback Offer) ஆகும். இதன் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தினால் உங்களுக்கு ரூ.1000 கேஷ்பேக் கிடைக்கும்.

வெளியான 2வது வாரத்திலேயே ரூ.2000 விலை குறைப்பு!

மேற்கண்ட இரண்டு சலுகைகளையும் பயன்படுத்தும் பட்சத்தில் ரியல்மி சி67 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையை ரூ.13,999 இல் இருந்து ரூ.11,999 ஆக குறைக்க முடியும். ஒருவேளை உங்களால் பேங்க் கேஷ்பேக்கை பெற முடியவில்லை என்றால், குறைந்ததது ரூ.1000 பிளாட் டிஸ்கவுண்ட்டையாவது பெறலாம்.

ரியல்மி சி67 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: இது 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 680 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.72-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சன்னி ஒயாசிஸ் வடிவமைப்பானது சூரிய ஒளியில் வெளிப்படும் போதெல்லாம் பேக் பேனலை பிரகாசிக்க செய்கிறது.

வெளியான 2வது வாரத்திலேயே ரூ.2000 விலை குறைப்பு!

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி யுஐ 4.0 உடன் அனுப்பப்படும் இந்த ஸ்மார்ட்போனில் மினி கேப்சூல் 2.0 அம்சமும் (Mini Capsule 2.0) உள்ளது. இது டிஸ்பிளேவின் மேல் பக்கத்தில் உள்ள ஹோல் பஞ்ச் கட்அவுட்டை (Hole-punch Cutout) சுற்றி அறிவிப்புகள் மற்றும் பிற அலெர்ட்களை காட்சிப்படுத்தும்.

6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ சிப்செட் மூலம் இயக்கப்படும் ரியல்மி சி67 5ஜி ஸ்மார்ட்போனானது 6ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது. இருப்பினும் டைனமிக் ரேம் அம்சத்தின் கீழ் இதன் ரேம்-ஐ கூடுதலாக 6ஜிபி வரை அதிகரிக்கலாம். அதாவது மொத்தம் 12ஜிபி ஆக அதிகரிக்கலாம். மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் இதன் ஸ்டோரேஜை 2டிபி வரை விரிவாக்கலாம்.

கேமராக்களை பொறுத்தவரை, இது 50 மெகாபிக்சல் மெயின் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் ஷூட்டர் ஆகியவற்றை உள்ளடக்கிய டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. மேலும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் வழியாக 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

ரியல்மி நிறுவனத்தின் கூற்றுப்படி, 29 நிமிடங்களில் இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும். இது மிகவும் ஸ்லிம் ஆன வடிவமைப்பை கொண்டுள்ளது. வெறும் 7.89மிமீ தடிமனை மட்டுமே கொண்டுள்ளது. இந்த விலைப்பிரிவில் மிகவும் ஸ்லிம் ஆன ஸ்மார்ட்போன் இதுதான் என்று கூறப்படுகிறது.

இது தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்கையும் பெற்றுள்ள ரியல்மி சி67 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரையும் கொண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக "ரூ.11,999 க்கு இதுக்கு மேல வேற என்ன வேணும்!" என்று கேட்க தூண்டும் அம்சங்களை இது பேக் செய்கிறது. அதாவது நிச்சயமாக இதுவொரு மொக்கையான மாடல் அல்ல!

More from GizBot

Best Mobiles in India

English summary
New Year Offer on Realme C67 5G Smartphone Rs 1000 Flat discount Offer Ends Jan 31 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X