எல்லா ஸ்மார்ட்போன்களையும் ஓரங்கட்ட வருகிறது இந்த புதிய ரெட்மீ.!

இக்கருவி 16 மெகாபிக்சல் + 5 மெகாபிக்சல் என்ற பின்புற கேமராக்கள் மற்றும் 4000எம்ஏஎச் பேட்டரி ஆகிய அம்சங்களை கொண்ட ஒரு அலாய் உடல் வடிவமைப்பை கொண்டிருக்கலாம்.

|

சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் வரிசையில் மிகவும் பிரபலமான ரெட்மீ தொடரின் அடுத்தக்கட்ட இந்திய ஆக்கிரமிப்பு விரைவில் நிகழ்வுள்ளது.

இந்திய சந்தையில் புகழ் பெற்ற ரெட்மீ தொடர் கருவிகள் தான் சியோமி நிறுவனத்தின் பிராதன வருவாய் என்பதை நீங்கள் அறிவீர்களா.? அந்த வருவாயை மென்மேலும் அதிகரிக்கும் நோக்கத்தில் சியோமி நிறுவனம் அதே தொடரில் புதிய ஸ்மார்ட்போன்கள் கொண்டுவருவதில் கவனம் செலுத்தி வருகின்றது.

ஆன்லைன் லீக்ஸ்

ஆன்லைன் லீக்ஸ்

ஏற்கனவே சியோமி நிறுவனம் அதன் பல அற்புதமான கருவிகளை இந்த ஆண்டில் அறிமுகம் செய்துள்ள நிலைப்பாட்டில் ஒரு புதிய சியோமி ரெட்மீ ஸ்மார்ட்போனை ஒன்றும் வரும் நாட்களில் எதிர்பார்க்கலாம் என்பதை ஆன்லைன் லீக்ஸ் ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

புதிய படங்கள்

புதிய படங்கள்

வெளியான லீக்ஸ் தகவலின் சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த புதிய படங்கள் ரெட்மி தொலைபேசி பெற்றுள்ள சில மேம்படுத்தல்களை அப்பட்டமாக காட்டுகின்றன. கூறப்படும் இந்த ஸ்மார்ட்போன் மிகவும் குறைந்த பெஸல்கள் கொண்ட டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

பெஸல்லேஸ் டிஸ்பிளே

பெஸல்லேஸ் டிஸ்பிளே

இவ்வகையிலான பெஸல்லேஸ் டிஸ்பிளே அதன் ஒட்டுமொத்த வடிவமைப்பையும் மாற்றுகிறது என்றே கூறவேண்டும். விவோ மற்றும் ஓப்போ ஏற்கனவே குறைந்த விலை 18: 9 விகிதம் அளவிலான போன்களை வெளியிட்டுள்ளன, அதனை மனதிற்கொண்டு சியோமியும் பெஸல்லெஸ் களத்தில் குதிக்கிறது என்பது போல் தெரிகிறது.

இரட்டை கேமரா

இரட்டை கேமரா

இரண்டாவது லீக்ஸ் புகைப்படம், ஸ்மார்ட்போனின் பின்புற பக்கத்தைக் காட்டுகிறது. அதில் ஒரு இரட்டை கேமரா அமைப்பு இருப்பதைக் காண முடிகிறது. சூப்பர் பட்ஜெட் சாதனங்களில் கூட இரட்டை கேமராக்கள் வெளியாகும் நிலைப்பாட்டில் அடுத்த ரெட்மீ ஸ்மார்ட்போனில் இந்த அம்சம் இருப்பது பெரிய ஆச்சரியமான கருதப்படாது.

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

டூயல் கேம் மட்டுமின்றி இயக்கருவி கைரேகை ஸ்கேனர் ஒன்றையும் அதன் கேமராக்களின் ஃபிளாஷிற்கு கீழ் உள்ளது. மொத்தத்தில், சியோமி தனது வாடிக்கையாளர்களுக்கு மிக சமீபத்திய அம்சங்களை உள்ளடக்கிய ஒரு சாதனத்தை வழங்க விரும்புகிறது என்பது போல் தெரிகிறது.

ரெட்மீ நோட் 5 வகை

ரெட்மீ நோட் 5 வகை

இந்த புதிய மர்மமான ஸ்மார்ட்போன் ஒரு ரெட்மீ நோட் 5 வகை சாதனமாக இருக்கலாமென கூறப்படுகிறது.மற்ற வதந்திகளின்படி, இந்த தொலைபேசியானது ஸ்னாப்டிராகன் சிபியூ இன்றி ஒரு உயர் இறுதி மீடியாடெக் பி25 அல்லது பி30 சிப்செட் கொண்டு வர முடியும் என்று கூறுகின்றன.

16 மெகாபிக்சல் + 5 மெகாபிக்சல்

16 மெகாபிக்சல் + 5 மெகாபிக்சல்

மேலும், இக்கருவி 16 மெகாபிக்சல் + 5 மெகாபிக்சல் என்ற பின்புற கேமராக்கள் மற்றும் 4000எம்ஏஎச் பேட்டரி ஆகிய அம்சங்களை கொண்ட ஒரு அலாய் உடல் வடிவமைப்பை கொண்டிருக்கலாம். மேலும், இதன் திரையளவு 18: 9 என்ற விகிதம் கொண்டிருக்கலாம்.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

ஒரு 3 ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பு சேமிப்பு மற்றும் ஒரு 4ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்பு என இரண்டு வகைகள் வெளிவரும் இக்கருவி முறையே சுமார் ரூ.9,839/- மற்றும் ரூ.12,794/- என்ற விலை நிர்ணயம் பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
New Xiaomi Redmi Note smartphone with dual cameras and bezel-less display leaked. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X