Home
Mobile

சான்றிதழ் வலைத்தளத்தில் சிக்கிய புதிய சியோமி மீ நோட் 2.!

ஸ்மார்ட்போன் மாடல் எண் 2015212 என்று பட்டியலிடப்பட்டுள்ள இந்த கருவியின் அம்சங்கள் என்னென்ன.?

By Muthuraj

சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அதன் சியோமி மீ மிக்ஸ் கருவியுடன் இணைந்து சியோமி மீ நோட் 2 கருவியை அறிமுகம் செய்தது. இப்போது அதன் மற்றொரு மாறுபாடு டிஇஎன்ஏஏ (TENAA) சான்றிதழ் வலைத்தளத்தில் காணப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் மாடல் எண் 2015212 என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

சுவாரஸ்யமாக ஏற்கனவே இருக்கும் 4ஜிபி ரேம் மற்றும் 6ஜிபி ரேம் ஆகிய இரண்டு மீ நோட் 2 கருவிகளும் முறையே 2015211 மற்றும் 2015213 என்ற மாதிரி எண்கள் கொண்டுள்ளது. அதனால் இந்த சாதனமானது முந்தைய மாதிரிகள் போன்றே தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

துரதிர்ஷ்டவசமாக, சான்றிதழ் வலைத்தளத்தில் சாதனத்தின் உண்மையான புகைப்படம் இல்லை ஆக இதுவொரு மீ நோட் 2 மாறுபாடு தானா அல்லது வேறு கருவியா என்பதில் உறுதி கிடையாது. எனினும் குறிப்புகளின்படி இந்த புதிய மாறுபாடு ஒரு குறைந்த ரேம் கட்டமைப்பு கொண்டு மற்றும் நெகிழ்வான வகையிலான ஒரு சாதாரண ஓல்இடி டிஸ்ப்ளே கொண்டு வெளிவரலாம்.

பேட்டரி

பேட்டரி

குறிப்பில் இக்கருவி, ஏற்கனவே இருக்கும் மீ நோட் 2 கருவியோடு ஒப்பிடும் போது ஒரு 77.2 சதவீதம் உடல் ஸ்க்ரீன் விகிதம் மற்றும் வளைந்த விளிம்புகளை கொண்ட 5.7 அங்குல டிஸ்ப்ளே காட்சி மற்றும் ஒரு 4070எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும் என்று காட்டுகிறது. மேலும் அளவீட்டில் 156.2x77.2x7.6மிமீ இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிப்செட்

சிப்செட்

உடன் ஒரு 64-பிட் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 821 சிப்செட் உடனான 2.35ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் அட்ரெனோ 530 ஜிபியூ மூலம் இயக்கப்படுகிறது.

கேமரா

கேமரா

உடன் சியோமி நிறுவனத்தின் இந்த புதிய தலைமை அக்கருவி ஒரு சோனி ஐஎம்க்ஸ்318 எக்ஸ்மோர் ஆர்எஸ் சென்சார், ஒரு எப்/2.0 துளை, பிடிஏஎப் மற்றும் 4கே வீடியோ நிலைப்பாடு கொண்ட அதன் சொந்த 3-ஆக்சிஸ் கிரையோஸ்கோப் கொண்ட ஒரு 22.56 மெகாபிக்சல் பின்புற கேமரா கொடுள்ளது. செல்பீகளுக்காக, க்ரோ செல்பீ மற்றும் பியூட்டிப்பை 3.0 போன்ற அம்சங்கள் கொண்ட எப்/2.0 துளை கொண்ட 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு

இணைப்பு ஆதரவு

பாஸ்ட் சார்ஜ் 3.0 ஆதரிக்கும் இக்கருவி 4070எம்ஏஎச் பேட்டரித்திறன் கொண்டுள்ளது மற்றும் 6000 எம்பிபிஎஸ் வேக எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், மீ பே முதலியன இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. உடன் ஸ்பீக்கர்கள் மற்றும் ஹெட்போன்களுக்கு மேம்பட்ட ஆடியோ தரம் வழங்கும் ஆக்வடிக் ஆடியோ செயலியும் கொடுள்ளது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

அறிமுகம் : 3ஜிபி ரேம், 4100எம்ஏஎச் கொண்ட சியோமி ரெட்மீ 4எக்ஸ்.

Best Mobiles in India

English summary
New Xiaomi Mi Note 2 variant with 5.7-inch display spotted. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X