டூயல் செல்பி கேமராவுடன் மிரட்டலான 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த Xiaomi: என்ன விலை?
நீண்ட நாட்களுக்கு பிறகு சியோமி நிறுவனம் ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதாவது தற்போது சியோமி சிவி 3 (Xiaomi Civi 3) ஸ்மார்ட்போன் தான் அறிமுகம் செய்துள்ளது சியோமி நிறுவனம். அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் தனித்துவமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
அதாவது இந்த போன் டூயல் செல்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது. அதிலும் அல்ட்ரா வைடு செல்பி கேமரா வசதி இதில் இருப்பதால் துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும். செல்பி புகைப்படங்களை அதிகம் விரும்பும் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். மேலும் இந்த போனின் அம்சங்கள் மற்றும் விலைப் பற்றி தகவலைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

புதிய சியோமி சிவி 3 ஸ்மார்ட்போன் 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 12-பிட் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1500 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், டால்பி விஷன் ஆதரவு, எச்டிஆர் 10 பிளஸ்,கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 மற்றும் பல்வேறு சிறப்பான டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த சியோமி போன் வெளிவந்துள்ளது.
குறிப்பாக 3.1ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8200- அல்ட்ரா 4என்எம் பிராசஸர் வசதியுடன் இந்த சியோமி சிவி 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். மேலும் MIUI 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் தரமான மென்பொருள் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சியோமி ஸ்மார்ட்போன்.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது அசத்தலான சியோமி சிவி 3 ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனில் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் உள்ளன. இதுதவிர 4கே வீடியோ பதிவு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி ஆட்டோபோகஸ் கேமரா + 32எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் செல்பி கேமராக்களை கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த அட்டகாசமான சியோமி சிவி 3 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த சியோமி சிவி 3 ஸ்மார்ட்போன். சியோமி சிவி 3 போனின் எடை 173.5 கிராம். அதேபோல் கோக்கனட் Ash,ரோஸ் பர்பிள், மின்ட் கிரீன், அட்வென்ச்சர் கோல்ட் நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
4500 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த சியோமி சிவி 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸகேனர் ஆதரவுடன் இந்த புதிய சியோமி சிவி 3 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

5ஜி, வைஃபை 6, புளூடூத் 5.2, என்எப்சி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சியோமி போன். அதேபோல் சியோமி சிவி 3 ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு இந்த போனின் ஆரம்ப விலை 2499 yuan (இந்திய மதிப்பல் ரூ.29,245) ஆகும்.


Click it and Unblock the Notifications








