6.64-இன்ச் டிஸ்பிளே.. 44W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. புது Vivo போன் அறிமுகம்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ Y78m (Vivo Y78m) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. தற்போது இந்த புதிய விவோ போன் சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் சீனாவில் விவோ Y78 மற்றும் விவோ Y78+ ஸ்மார்ட்போன்களுக்கு பிறகு இந்த விவோ Y78m ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட விவோ Y78m ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ Y78m அம்சங்கள்: 6.64-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (Full HD+)டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய விவோ Y78m போன் வெளிவந்துள்ளது. அதேபோல்1080 x 2388 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 19.9:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 1500:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக ஃபுல் எச்டி டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
விவோ Y78m ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதேபோல் இந்த போனில் எல்இடி பிளாஷ் ஆதரவும் உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.
ஆக்டோ-கோர் மீடியாடெக் 7020 சிப்செட் (Dimensity 7020 chipset) உடன் ஐஎம்ஜி பிஎக்ஸ்எம்-8-256 ஜிபியு ஆதரவு இதில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த வேகம் மற்றும் செயல்திறன் தரும். மேலும் OriginOS 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய விவோ Y78m போன் வெளிவந்துள்ளது.
8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ், 12ஜிபி ரேம் +256ஜிபி ஸ்டோரேஜ் என மூன்று வேரியண்ட்களில் இந்த புதிய விவோ போன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
விவோ Y78m ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (44W fast charging) வசதி உள்ளது. எனவே இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் கைரேகை ஸகேனர் ஆதரவுடன் இந்த விவோ Y78m ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஸ்எஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய விவோ Y78m போன். மேலும் கருப்பு, நீலம் மற்றும் தங்க நிறங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. அதேபோல் விவோ Y78m போனின் எடை 190 கிராம் ஆகும்.
12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ Y78m மாடலின் விலை 1,999 Yuan (இந்திய மதிப்பில் ரூ.22,900) ஆகும். பின்பு மற்ற இரண்டு வேரியண்ட்களின் விலை விரைவில் வெளியாகும். குறிப்பாக இந்த விவோ Y78m ஸ்மார்ட்போன் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








