அடி தூள்: சூப்பரான 5ஜி ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த Vivo.! முழு விவரம்.!
விவோ நிறுவனம் தனித்துவமான டிஸ்பிளே மற்றும் தரமான சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் கொண்ட போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள் சற்று உயர்வான விலையில் வெளிவந்தாலும், விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இருக்கும்.
இந்நிலையில் விவோ நிறுவனம் புதிய விவோ Y78+ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த புதிய விவோ Y78+ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ Y78+ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாமசான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போன் வளைந்த டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
இந்த புதிய விவோ Y78+ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் மற்றும் மேம்பட்ட வேகத்தை கொடுக்கும். அதேபோல் Origin OS 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த விவோ Y78+ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் மூன் ஷேடோ பிளாக், வார்ம் சன் கோல்ட் மற்றும் ஸ்கை ப்ளூ போன்ற நிறங்களில் விவோ Y78+ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.
இந்த விவோ Y78+ 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக கொணடுள்ளது இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன்.

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட விவோ Y78+ 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜ் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. எனவே விரைவாக இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய விவோ போன்.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ Y78+ 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து அம்சங்களும் மிகவும் அருமையாக உள்ளன என்றுதான் கூறவேண்டும். அதேபோல் இந்த போனின் ஆரம்ப விலை CNY 1,599(இந்திய மதிப்பில் ரூ.19,000).


Click it and Unblock the Notifications








