சத்தமின்றி புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது Vivo.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
சியோமி, ஒப்போ நிறுவனங்களை போன்று விவோ நிறுவனமும் பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யத் தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் தனித்துவமான கேமரா அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. இந்நிலையில் புதிய 5Gஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது விவோ.
அதாவது விவோ நிறுவனம் சத்தமில்லாமல் விவோ Y78 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த போன் பட்ஜெட் விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த புதிய விவோ போன் தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும்.

விவோ Y78 ஸ்மார்ட்போன் ஆனது 6.47-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 2388×1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
இப்போது அறிமுகம் செய்யப்பட்ட விவோ Y78 ஸ்மார்ட்போனில் டைமன்சிட்டி 7020 6என்எம் பிராசஸர் உடன் IMG BXM-8-256 ஜிபியு ஆதரவு உள்ளது. எனவே கேமிங் பயன்பாடுகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் அருமையாகப் பயன்படும். குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். பின்பு OriginOS 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
புதிய விவோ Y78 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தெளிவான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/226ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ Y78 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த விவோ Y78 ஸ்மார்ட்போன்.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ Y78 ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய விவோ Y78 ஸ்மார்ட்போன் மாடல்.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த விவோ Y78 ஸ்மார்ட்போன். மேலும் கருப்பு, நீலம் மற்றும் தங்க நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த புதிய விவோ போனின் ஆரம்ப விலை 1399 yuan (இந்திய மதிப்பில் ரூ.16,575).


Click it and Unblock the Notifications








