Home
Mobile

Vivo நிறுவனத்தின் போன்தானா இது.! வேறலெவல் அம்சங்களுடன் வெளிவந்த புதிய போன்.!

சியோமி, ஒப்போ போன்ற முன்னணி நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது விவோ நிறுவனம். குறிப்பாக விவோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதுவும் தரமான கேமரா போன்களை அறிமுகம் செய்கிறது விவோ.

இந்நிலையில் விவோ நிறுவனம் ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை தற்போது சர்வதேசச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது விவோ நிறுவனம் தற்போது சர்வதேசச் சந்தையில் விவோ Y78 5ஜி (Vivo Y78 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

வேறலெவல் அம்சங்களுடன் வெளிவந்த புதிய Vivo போன்.!

புதிய விவோ Y78 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 2400 × 1080 பிக்சல்ஸ், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த விவோ போனை பார்ப்பதற்கு சமீபத்திய ஒன்பிளஸ் போன் போன்றே உள்ளது.

குறிப்பாக குவால்காம் ஸ்னாப்ராகன் 695 சிப்செட் உடன் அட்ரினோ ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ Y78 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு Funtouch OS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

இந்த விவோ Y78 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

64எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ Y78 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.

அதேபோல் 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு விவோ Y78 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனில் நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய விவோ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வேறலெவல் அம்சங்களுடன் வெளிவந்த புதிய Vivo போன்.!

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ Y78 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனின் எடை 177 கிராம் ஆகும். ஃப்ளேர் பிளாக் மற்றும் ட்ரீமி கோல்ட் நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் விவோ Y78 5ஜி போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் வெளியிடப்படவில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
New VivoY78 5G phone has been launched with 64MP rear camera: Check Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X