44W ஃபிளாஷ் சார்ஜ்: சத்தமின்றி புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்த Vivo.! பட்ஜெட் விலை..
விவோ நிறுவனம் இந்தியாவில் சத்தமின்றி ஒரு அசத்தலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதாவது விவோ நிறுவனம் தற்போது விவோ Y27 எனும் ஸ்மார்ட்போனை தான் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய போன் அட்டகாசமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விவோ Y27 (Vivo Y27) ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 2388 × 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான போன். அதேபோல் இந்த போன் வாட்டர்டிராப் நாட்ச் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

குறிப்பாக ஆக்டோ-கோர் மீடியாடெக் ஜி85 பிராசஸர் வசதியைக் கொண்டு இந்த புத்தம் புதிய விவோ Y27 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு Funtouch OS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதி இதில் உள்ளது.
6ஜிபி ரேம் (6ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 128ஜிபி ஸடோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய விவோ Y27 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த விவோ Y27 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு கொண்டுள்ளது இந்த போன்.
விவோ Y27 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களுடன் இந்த புதிய விவோ போன் வெளிவந்துள்ளது.
5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு இந்த விவோ Y27 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 44 வாட்ஸ் ஃபிளாஷ் சார்ஜ் டெக்னலாஜி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த விவோ போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ஆதரவுக்கு என ஐபி54 சான்றிதழ் உடன் விவோ Y27 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆதரவு, ப்ராக்ஸிமிட்டி சென்சார், இ-காம்பஸ் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த புதிய விவோ போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
பிளாக்இ மற்றும் கார்டன் கிரீன் நிறங்களில் இந்த விவோ Y27 ஸ்மார்ட்போன் போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக புளூடூத் 5.0, வைஃபை 2.4 GHz / 5 GHz, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் விவோ Y27 போனின் விலை ரூ.14,999-ஆக உள்ளது. அமேசான், பிளிப்கார்ட், விவோ இந்தியா இ-ஸ்டோர் தளங்களில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








