பட்ஜெட் விலை போன் என குறைவா எடை போட்டுடாதீங்க.. தரமான அம்சங்கள் இருக்கு.! அறிமுகமானது புது vivo போன்.!
விவோ நிறுவனம் இப்போது தரமான வடிவமைப்பு மற்றும் தனித்துவமான அம்சங்களைக் கொண்ட போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக விவோ நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விவோ நிறுவனம் ஒரு புத்தம் புதிய விவோ Y27 5ஜி ஸ்மார்ட்போனை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய போன் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த போன் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

6.64-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு இந்த விவோ Y27 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 2388 × 1080 பிக்சல்ஸ், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
புதிய விவோ Y27 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 சிப்செட் வசதி உள்ளது. எனே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதேபோல் Funtouch OS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த விவோ Y27 5ஜி போன் வெளிவந்துள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது இந்த விவோ Y27 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும்.
4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த விவோ Y27 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

விவோ Y27 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு சிறப்பான வசதிகளுடன் இந்த புதிய விவோ Y27 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ Y27 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை NT$ 8,490 (இந்திய மதிப்பில் ரூ.22,326)-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








