Home
Mobile

மிரளுது பட்ஜெட்.. ரூ.12,999 போதும்.. 6.56-இன்ச் டிஸ்பிளே..50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

விவோ நிறுவனம் தனது புதிய விவோ ஒய்17 எஸ் (Vivo Y17s) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய போன் தற்போது சிங்கப்பூரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த புதிய போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் விவோ ஒய்17 எஸ் ஸ்மார்ட்போன் 50எம்பி கேமரா, மீடியாடெக் சிப்செட், பெரிய டிஸ்பிளே எனப் பல சிறப்பான அம்சங்களைக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. ஃபாரஸ்ட் கிரீன் (Forest Green) மற்றும் கிளிட்டர் பர்பிள் (Glitter Purple) நிறங்களில் இந்த புத்தம் புதிய போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் முழு அம்சங்களையும் சற்று விரிவாகப் பார்ப்போம்.

மிரளுது பட்ஜெட்.. ரூ.12,999 போதும்..  5000mAh பேட்டரி.. எந்த போன்?

6.56-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி ( IPS LCD) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய எச்டி பிளஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்17 எஸ் ஸ்மார்ட்போன். மேலும்720 x 1612 பிக்சல்ஸ், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 840 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போன். குறிப்பாக பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் (MediaTek Helio G85 chipset) வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது விவோ ஒய்17 எஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் FunTouch OS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தைக் கொண்டு இந்த புத்தம் புதிய போன் வெளிவந்துள்ளது.

ஆனால் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ ஒய்17 எஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். இந்த போனின் கேமராவில் எச்டிஆர் (HDR) மற்றும் போக்கே (Bokeh) சப்போர்ட் உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.

குறிப்பாக விவோ ஒய்17 எஸ் ஸ்மார்ட்போனில் 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இதில் சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor)வருகிறது. குறிப்பாக ஸ்லிம் டிசைன் மற்றும் ஐபி54 ரேட்டிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

மிரளுது பட்ஜெட்.. ரூ.12,999 போதும்..  5000mAh பேட்டரி.. எந்த போன்?

விவே ஒய்17 மாடலில் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை (Wi-Fi 802), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) மற்றும் ஜிபிஎஸ் (GPS) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. அதோடு 3.5 எம்எம் ஆடியோ ஜாக் வருகிறது. டைப் - சி சார்ஜிங் போர்ட் வருகிறது. பின்பு இந்த போனின் விலை SGD 199 (இந்திய மதிப்பில் ரூ.12,000) ஆகும்.

அதேபோல் விவோ நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Vivo Y17S launched with 5,000mAh battery, 50MP dual cameras: check specifications, price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X