5000mAh பேட்டரி, டூயல் ரியர் கேமராவுடன் Vivo Y16 4G ஸ்மார்ட்போன் அறிமுகம்!
விவோ நிறுவனம் புதிய விவோ Y16 4G ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய போன் டூயல் ரியர் கேமரா, மீடியாடெக் சிப்செட், பெரிய பேட்டரி எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

விவோ Y16 4G போன்
மேலும் இந்த புதிய விவோ Y16 4G போன் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த
ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாக இப்போது பார்ப்போம்.

ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே
விவோ Y16 4G ஸ்மார்ட்போனில் 6.51-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதி உள்ளது. குறிப்பாக இந்த போன் உங்களுக்கு ஒரு
தனித்துவமான அனுபவத்தை கொடுக்கும். அதேபோல் 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்தஅட்டகாசமான விவோ ஸ்மார்ட்போன்.

மீடியாடெக் சிப்செட்
புதிய விவோ Y16 4G ஸ்மார்ட்போனில் தரமான மீடியாடெக் பி35 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த போனில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் Funtouch OS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
விவோ Y16 4G ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்
ஆதரவு உள்ளது.

13எம்பி பிரைமரி கேமரா
விவோ Y16 4G ஸ்மார்ட்போன் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய விவோ போன்.
மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி
விவோ Y16 4G ஸ்மார்ட்போனில் பெரிய பேட்டரி வசதி உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதாவது இந்த போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 10W பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

கனெக்டிவிட்டி
ஹெட்ஃபோன் ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் 5.0, வைஃபை, ஜிபிஎஸ், 4ஜி எல்டிஇ போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ போன். குறிப்பாக ஸ்டெல்லர் பிளாக் மற்றும் ட்ரிஸ்லிங் கோல்ட் நிறங்களில் இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த போன் சீனாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டாலும், விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும் இந்த போன் குறைவான எடையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications