ஒன்பிளஸ் போன்களை ஓரங்கட்ட இப்படி ஒரு 5G போனை கொண்டார போகுதா விவோ... டீசரே மிரட்டுதேப்பா!
விவோ நிறுவனம் இந்தியாவில் வரும் பிப்ரவரி 16-ம் தேதி விவோ Y100 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக ஒன்பிளஸ், மோட்டோ நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் பல அசத்தலான தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த புதிய விவோ போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
தற்போது இணையதளத்தில் இந்த விவோ Y100 5ஜி போனின் அம்சங்கள் வெளிவந்துள்ளது. அதாவது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட விவோ Y100 5ஜி போனின் விலை ரூ.24,999-ஆக உள்ளது. மேலும் இந்த கருப்பு, நீலம் மற்றும் தங்க நிறங்களில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன்கள் ரூ.25,000-விலையில் தான் அறிமுகம் செய்யப்படுகின்றன. ஆனால் அதை விட தனித்துவமான சிப்செட் மற்றும் தரமான கேமரா வசதியுடன் இந்த விவோ போன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு கிடைக்கும். குறிப்பாக கேமரா வசதியில் ஒன்பிளஸ் நிறுவனத்தை விட விவோ நிறுவனம் அதிக கவனம் செலுத்துகிறது. இப்போது ஆன்லைனில் கசிந்த விவோ Y100 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
அட்டகாசமான டிஸ்பிளே
விவோ Y100 5ஜி ஸ்மார்ட்போன் 6.3-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும். குறிப்பாக எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த 5ஜி போன் வெளிவரும். பெரிய டிஸ்பிளே என்பதால் இந்த போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விவோ Y100 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 900 சிப்செட் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இந்த சிப்செட் உதவியுடன் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் FuntouchOS UI சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டுள்ளது இந்த விவோ Y100 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த விவோ Y100 ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த விவோ Y100 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

64எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது இந்த விவோ Y100 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தெளிவாகப் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த விவோ Y100 5ஜி ஸ்மார்ட்போன்.
பாஸ்ட் சார்ஜிங் வசதி
விவோ Y100 5ஜி ஸ்மார்ட்போன்4500 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ Y100ஸ்மார்ட்போன்.

கனெக்டிவிட்டி
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த விவோ Y100 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனின் அனைத்து அம்சங்களும் உள்ளன. மேலும் கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications