மார்க்கெட்டே அதிர போகுது.. Sony கேமரா.. 512GB மெமரி.. 80W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த போன்?
விவோ நிறுவனம் அடுத்து விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியா மற்றும் உலக சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புளூடூத் SIG இணையதளத்தில் தளத்தில் காணப்பட்டுள்ளது. எனவே விவோ வி30 ப்ரோ மாடல் வரும் வாரங்களில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக புளூடூத் SIG இணையதளத்தில் ஏ2319 என்ற மாடல் எண் உடன் விவோ வி30 ப்ரோ காணப்பட்டுள்ளது. குறிப்பாக ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய விவோ போன். மேலும் ஆன்லைனில் வெளியான விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ வி30 ப்ரோ அம்சங்கள் (Vivo V30 Pro specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி அமோலெட் (AMOLED)டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக இதன் டிஸ்பிளேவில் 1,260x2,800 பிக்சல்கள், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ், 2800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.
இந்த போனின் வலது பக்கத்தில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர் உள்ளன. அதேபோல் பஞ்ச்-ஹோல் கட்அவுட் டிசைன், வளைந்த டிஸ்பிளே, ஆரா லைட் போன்ற பல்வேறு சிறப்பான வசதிகளுடன் இந்த விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.
தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 9200 பிளஸ் சிப்செட் (MediaTek Dimensity 9200+ SoC) வசதியுடன் விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் விவோ வி30 ப்ரோ அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.
50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்920 (Sony IMX920) பிரைமரி கேமரா + 50எம்பி சாம்சங் ஜேஎன்1 சென்சார் (Samsung JN1 sensor)அல்ட்ரா வைடு கேமரா + 12எம்பி சோனி ஐஎம்எக்ஸ்663 (Sony IMX663) டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போன்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவைக் கொண்டுள்ளது விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் இந்த விவோ போன் வெளிவரும். 16ஜிபி ரேம் +256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த விவோ போன் விற்பனைக்கு வரும்.

விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.30,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications