மார்ச் 21 கன்ஃபார்ம்.. சோனி கேமரா.. 256ஜிபி மெமரி.. 44W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுக தேதியை வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது. இப்போது விவோ டி3 5ஜி போனின் அறிமுக தேதி, அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்களைப் பார்க்கலாம்.
விவோ டி3 5ஜி அம்சங்கள் (Vivo T3 5G specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) வசதியுடன் இந்த போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ், 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட் (MediaTek Dimensity 7200 chipset) வசதியுடன் விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அசத்தலான விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.
விவோ டி3 5ஜி போனுக்கு IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட்(Dust And Water Resistant) கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த போன் விற்பனைக்கு வரும். மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் (Sony IMX882 sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி பொக்கெ லென்ஸ் (bokeh lens) என்கிற ட்ரிபிள் ரியர் கேமராக்களுடன் விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
இந்த போனின் உதவியுடன் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எல்டி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். மேலும் கிரிஸ்டல் ஃப்ளேக் (Crystal Flake) மற்றும் காஸ்மிக் ப்ளூ (Cosmic Blue) நிறங்களில் இந்த புதிய விவோ அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த அசத்தலான விவோ டி3 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் இந்த போனின் பேட்டரி சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (dual stereo speakers), யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
இந்தியாவில் வரும் மார்ச் 21-ம் தேதி (March 21) விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த புதிய விவோ போன் ஆனது ரூ.20,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications








