Virat Kohli கையில் இருக்கும் புது Vivo ஸ்மார்ட்போன்: கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!
கிரிக்கெட் வீரர் விராட் கோலி புதிய ஸ்மார்ட்போன் குறித்து டீஸ் செய்துள்ளார். இந்த ஸ்மார்ட்போன் விவோ வி25 ஆக இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் அப்படி என்ன ஸ்பெஷல் என்ற தகவலை பார்க்கலாம்.

விராட் கோலி டீஸ் செய்துள்ள ஸ்மார்ட்போன்
கிரிக்கெட் வீரர் விராட் கோலி புதிய விவோ ஸ்மார்ட்போன் குறித்து டீஸ் செய்திருக்கிறார். விராட் கோலி டீஸ் செய்துள்ள இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் விவோ வி25 ஆக இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. விவோ வி25 ஸ்மார்ட்போனானது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ எஸ்15 ப்ரோ சாதனத்தின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் அறிமுகமாவது உறுதி
விவோ வி25 ஸ்மார்ட்போனானது ஆகஸ்ட் மாதம் உலகளவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் களமிறங்குவது உறுதி. விராட் கோலி டீஸ் செய்த ஸ்மார்ட்போன், உலகளவில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன் என பல புகழை கொண்ட இதன் அம்சங்களை அறிந்துக் கொள்வது முக்கியம் அல்லவா. வாங்க அதையும் பார்க்கலாம்.

ஆகஸ்ட் மாதம் ஒன்று, செப்டம்பர் மாதம் ஒன்று
விவோ வி25 சீரிஸ் இல் இரண்டு மாடல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது விவோ வி25 மற்றும் விவோ வி25 ப்ரோ மாடல் ஆகும். விவோ வி25 ஆனது ஆகஸ்ட் மாதமும் வி25 ப்ரோ செப்டம்பர் மாதமும் இந்தியாவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. வரவிருக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போனானது இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மூலம் டீஸ் செய்யப்பட்டிருக்கிறது.
விராட் கோலி டீஸ்
விராட் கோலி பகிர்ந்த ட்வீட்டின் விவரங்களை பார்க்கலாம். "எனக்கு மிகவும் பிடித்த நீல நிற நிழல்" என்ற தலைப்பில் இந்த ட்வீட் பகிரப்பட்டிருக்கிறது.
இந்த ட்வீட்டில் நீல நிற ஸ்மார்ட்போனை கையில் வைத்திருக்கும் படி விராட் கோலி இருக்கிறார். இந்த ஸ்மார்ட்போன் விவோ S15 Pro ஆக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
அதேபோல் வரவிருக்கும் விவோ வி25 ஸ்மார்ட்போனானது இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனாவில் அறிமுகமான S15 Pro இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு வேரியண்ட்களில் அறிமுகமா?
Vivo V25 ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் உடன் வரும் என முந்தைய கசிவு தெளிவுப்படுத்தியது. அதோடு 128 ஜிபி மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் இந்த மாடலில் இடம்பெறும் எனவும் தகவல் வெளியானது.
அதேபோல் டைமண்ட் ப்ளாக் மற்றும் சன்ரைஸ் கோல் என இரண்டு வண்ண விருப்பங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.

புதிய விவோ ஸ்மார்ட்போனின் விலை என்ன தெரியுமா?
Vivo V25 ஸ்மார்ட்போனானது இந்தியாவில் சுமார் ரூ.30,000 விலைப் பிரிவில் அறிமுகம் செய்யப்படும் எனவும் விவோ வி25 ப்ரோ சுமார் ரூ.40,000 விலைப் பிரிவில் அறிமுகம் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய ஸ்மார்ட்போன்களில் சரியான வெளியீட்டு தேதி தற்போது வரை தெளிவாகத் தெரியவில்லை.
இருப்பினும் டிப்ஸ்டர் யோகேஷ் பிராரின் தகவலின்படி, Vivo V25 சீரிஸ் ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு தரப்பில் வெளியான தகவல்
அதேபோல் மற்றொரு தகவலில் விவோ வி25 நான்கு வேரியண்ட்களில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. அது விவோ வி25, விவோ வி25 ப்ரோ, விவோ வி25இ மற்றும் விவோ வி25இ 4ஜி ஆகும். இந்த 4ஜி மாறுபாடு இந்தியாவில் வெளியிடப்படாது எனவும் கூறப்படுகிறது. இதெல்லாம் சரி இந்த ஸ்மார்ட்போன் அம்சங்களை பார்க்க வேண்டுமே வாருங்கள் பார்க்கலாம்.

Vivo V25 சிறப்பம்சங்கள்
Vivo V25 சிறப்பம்சங்கள் குறித்து வெளியான தகவலை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 6.62 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவுடன் 90Hz ரெஃப்ரெஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கும்.
இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 778ஜி அல்லது மீடியாடெக் டைமன்சிட்டி 1200 எஸ்ஓசி மூலம் இயக்கப்படலாம். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 44 வாட்ஸ் அல்லது 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கலாம்.
இந்த ஸ்மார்ட்போன் விவோ வி23 போன்றே ஃப்ளாட் ப்ரேம் வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

செல்பி கேமரா இதுவாக இருக்கலாம்
ஸ்மார்ட்போனின் பின்புற கேமரா விவரங்கள் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிற விவரங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷிங் ரேட் டிஸ்ப்ளே
இந்த ஸ்மார்ட்போனின் ப்ரோ மாடலை பொறுத்தவரை, இது டைமன்சிட்டி 8100 செயலி மூலம் இயக்கப்படும் எனவும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷிங் ரேட் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதில் 6.6 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே, 50 எம்பி பிரதான கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி மற்றும் அதிகாரப்பூர்வ அம்சங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த விவோ
விவோ நிறுவனம் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சமீத்தில் ஒரு புது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அது Vivo T1X ஆகும்.
Vivo T1X ஆனது 90 ஹெர்ட் ரெஃப்ரெஷிங் ரேட் உடனா 6.58 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளே, 50 எம்பி பிரதான ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா ஆதரவோடு வெளியானது.
இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ. 11,999, 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ.12,999 மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ. 14,999 ஆகும்.


Click it and Unblock the Notifications