மொத்தம் 6 Vivo போன்கள்; எல்லாவற்றின் மீதும் ரூ.4,000 ஆபர்; இதோ லிஸ்ட்!

|

ரூ.4,000 ஆபர் என்பது நிச்சயம் ஒரு பெரிய தொகையை மிச்சப்படுத்த உதவும் என்று நீங்கள் நினைத்தால், கீழ்வரும் 6 விவோ ஸ்மார்ட்போன்களில் ஒன்றை வாங்குவதற்கு இதுவே சிறந்த நேரம்!

அதென்ன மாடல்கள்? எந்தெந்த மாடல்களை யாரெல்லாம் வாங்கலாம்? யாரெல்லாம் வாங்காமல் தவிர்க்கலாம்? Vivo-வின் இந்த ஸ்மார்ட்போன் சலுகை எவ்வளவு நாட்கள் நீடிக்கும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

இந்த சலுகை இன்னும் எத்தனை நாட்களுக்கு கிடைக்கும்?

இந்த சலுகை இன்னும் எத்தனை நாட்களுக்கு கிடைக்கும்?

ஓணம் பண்டிகையை முன்னிட்டு விவோ நிறுவனம், அதன் பல வகையான ஸ்மார்ட்போன்களின் மீது ஒரே மாதிரியான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் அணுக கிடைக்கும் விவோவின் இந்த சலுகைகள் வருகிற செப்டம்பர் 18 வரை நீளும் என்பதால், ஒரு புதிய விவோ ஸ்மார்ட்போனை வாங்க நினைப்பவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்; ரூ.4,000-ஐ சேமிக்கலாம்!

Samsung ஷாக் ஆகும் அளவிற்கு.. Amazon அறிவித்துள்ள ரூ.40,049 ஆபர்!Samsung ஷாக் ஆகும் அளவிற்கு.. Amazon அறிவித்துள்ள ரூ.40,049 ஆபர்!

செப்.16 வரை என்னென்ன சலுகைகள் அணுக கிடைக்கும்?

செப்.16 வரை என்னென்ன சலுகைகள் அணுக கிடைக்கும்?

- விவோ எக்ஸ்80 சீரிஸ், விவோ வி23, விவோ வி25 ப்ரோ, விவோ ஒய்75 மற்றும் பிற மாடல்கள் மீது ரூ.4,000 வரை கேஷ்பேக் ஆபர்.

- விவோ X80 மற்றும் Vivo X80 Pro, விவோ V25 Pro, விவோ V23e, விவோ Y21G, விவோ Y35 ஸ்மார்ட்போன்களின் மீது ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் (Extended warranty).

- முக்கிய வங்கிகள் மற்றும் பைனான்ஸ் பார்ட்னர்களுடன் ஜீரோ டவுன் பேமண்ட் மற்றும் ஜீரோ இன்ட்ரெஸ்ட் உடனான நோ காஸ்ட் இஎம்ஐ (No cost EMI) விருப்பங்கள்.

Vivo X80 - யாரெல்லாம் வாங்கலாம்?

Vivo X80 - யாரெல்லாம் வாங்கலாம்?

உங்களுக்கு மிருதுவான 120Hz AMOLED டிஸ்ப்ளே, சக்திவாய்ந்த SoC மற்றும் திறன் கொண்ட கேமராக்கள், நல்ல பேட்டரி லைஃப் உடனான பாஸ்ட் சார்ஜிங் தான் முக்கியம் என்றால்.. நீங்கள் கண்களை மூடிக்கொண்டு எக்ஸ்80 ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

ஒருவேளை உங்களுக்கு ப்ரீ-இண்ஸ்டால்டு ப்ளோட்வேர், பர்ஸ்ட்-பார்ட்டி ஆப்களிலிருந்து ஸ்பேம் நோட்டிபிஃகேஷன்கள் பிடிக்காது என்றால், எக்ஸ்8-ஐ வாங்காமல் தவிர்க்கலாம்.

SharkBot அலெர்ட்! சிக்கிடீங்கனா.. வங்கிகளால் கூட ஒன்னும் செய்ய முடியாது!SharkBot அலெர்ட்! சிக்கிடீங்கனா.. வங்கிகளால் கூட ஒன்னும் செய்ய முடியாது!

Vivo X80 Pro-வின் நிறைகளும் குறைகளும்!

Vivo X80 Pro-வின் நிறைகளும் குறைகளும்!

இதன் Software எல்லோரையும் 'இம்ப்ரெஸ்' செய்யும்படி இல்லை. அதை தவிர்த்து இந்த ப்ரோ மாடலில் எந்த குறையும் இல்லை. ஷார்ப் ஆன 120Hz டிஸ்பிளே, நல்ல தரமான கேமராக்கள், தேவைகளை மீறும்படியான பேட்டரி லைஃப், சிறந்த கேமிங் செயல்திறன் என கிட்டத்தட்ட எல்லாமே நன்றாக இருக்கிறது!

Vivo V25 Pro-வை நம்பி வாங்கலாமா?

Vivo V25 Pro-வை நம்பி வாங்கலாமா?

விவோ V25 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது சக்திவாய்ந்த சிப்செட், நல்ல அவுட்புட்களை வழங்கும் கேமராக்கள் மற்றும் நல்ல பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.

மிகவும் அழகான டிசைன் உடன் வரும் இந்த விவோ ஸ்மார்ட்போன், கிட்டத்தட்ட அனைவராலும் விரும்பப்படும் ஸ்டாக் ஆண்ட்ராய்டு எக்ஸ்பீரியன்ஸை வழங்குகிறது என்றே கூறலாம்.

அம்பானியின் அடுத்த மாஸ்டர் பிளான்; எப்படியோ நமக்கு ரொம்ப வசதியா போச்சு!அம்பானியின் அடுத்த மாஸ்டர் பிளான்; எப்படியோ நமக்கு ரொம்ப வசதியா போச்சு!

Vivo V23e வொர்த் ஆன ஸ்மார்ட்போனா?

Vivo V23e வொர்த் ஆன ஸ்மார்ட்போனா?

விவோ V23e 5G ஸ்மார்ட்போன் ஆனது விலையை மீறிய பிரமிக்க வைக்கும் அம்சங்களுடன் உங்களின் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் எக்ஸ்பீரியன்ஸை மேம்படுத்தும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

இது 50MP மெயின் கேமரா, 44MP செல்பீ கேமரா போன்ற முக்கிய அம்சங்களையும் பேக் செய்கிறது.

Vivo Y21G-யின் நிறைகள் மற்றும் குறைகள்?

Vivo Y21G-யின் நிறைகள் மற்றும் குறைகள்?

விவோ Y21G மாடல் ஒரு பெர்ஃபார்மென்ஸ் ஸ்மார்ட்போன் ஆகும்; ஏனெனில் இது மல்டி-டர்போ 5.0-ஐ கொண்டுள்ளது. இது ஸ்மார்ட்போனை அதிக சக்தி வாய்ந்ததாக மாற்றுகிறது.

கேமிங் என்று வந்துவிட்டால் பிச்சு உதறும் இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்கள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.

பிரீமியம் போன் வாங்கணும்னு முடிவு பண்ணிட்டா இந்த 8-ல 1 தான் வாங்கணும்!பிரீமியம் போன் வாங்கணும்னு முடிவு பண்ணிட்டா இந்த 8-ல 1 தான் வாங்கணும்!

Vivo Y35-ஐ  நம்பி வாங்கலாமா?

Vivo Y35-ஐ நம்பி வாங்கலாமா?

விவோவின் Y35 மாடல் ஆனது மல்டி டாஸ்கிங்கை விரும்புபவர்களுக்கான ஒரு ஸ்மார்ட்போன் ஆகும். பெர்பார்மென்ஸ் மற்றும் பேட்டரி லைஃப்பில் எந்த தடையும் இருக்காது; கூடுதலாக, இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்களும் சிறந்த தரத்தை வெளிப்படுத்துகின்றன.

Best Mobiles in India

English summary
New Vivo Smartphone Offer September 2022 Rs 4000 Discount on Vivo X80 Series V25 Pro and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X