வந்துட்டான்.. VIVO-வின் புது Mini போன்.. 8.1மிமீ ஸ்லிம் டிசைனில் 6500mAh பேட்டரி, 90W சார்ஜிங், 16GB ரேம்!
பல வாரங்களாக வெளியான லீக்ஸ் மற்றும் அதிகாரப்பூர்வ விளம்பரங்களுக்கு பிறகு, விவோ (Vivo) நிறுவனத்தின் புதிய மினி பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் (Mini Flagship Smartphone) ஆக விவோ எஸ்50 ப்ரோ மினி (Vivo S50 Pro Mini) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது
தரமான டிசைன்: விவோ அதன் புதிய மினி ஸ்மார்ட்போனின் வடிவமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக வெளியான மாடலை போலல்லாமல், விவோ எஸ்50 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் ஆனது உயர்த்தப்பட்ட மாட்யூலில் கிடைமட்டமாக அடுக்கப்பட்ட கேமராக்களை கொண்டுள்ளது. இது ஐபோன் ஏர் மாடலில் உள்ள கேமரா செட்டப்பை போலவே தோன்றுகிறது.

மேலும் பின்புறத்தில் ஒரு தட்டையான கிளாஸ் பேனலை பயன்படுத்துகிறது, பக்கவாட்டில் விண்வெளி தர உலோக பிரேம்கள் உள்ளன. மேலும் விவோ எஸ்50 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் ஆனது அளவீட்டில் வெறும் 8.1 மிமீ தடிமனை மட்டுமே கொண்டுள்ளது மற்றும் எடையில் சுமார் 192 கிராம் உள்ளது. நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP68 + IP69 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது
என்னென்ன அம்சங்கள்? டிஸ்பிளேவை பொறுத்தவரை 1.5கே ரெசல்யூஷன் (2640 x 1216பிக்ஸல்ஸ்), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கண் பாதுகாப்பிற்கான டிஸ்பிளே செட்டிங்ஸ், 94.38 சதவீத ஸ்க்ரீன் டூ பாடி ரேஷியோ, 5000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 4320 ஹெர்ட்ஸ் PWM டிம்மிங் மற்றும் அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே கைபிங்கர் பிரிண்ட் உடனான "ஒப்பீட்டளவில் சிறிய" 6.31-இன்ச் LTPO AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை விவோ எஸ்50 ப்ரோ மினி ஸ்மார்ட்போனை இயக்குவது குவால்காம் நிறுவனத்தின் புதிய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Gen 5) ஆகும். இது விவோ எஸ்30 ப்ரோ மினி மாடலுடன் ஒப்பிடுகையில் செயல்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வழங்குகிறது.
இந்த புதிய சிப்செட் 16ஜிபி வரையிலான LPDDR5X அல்ட்ரா ரேம் மற்றும் 512GB UFS 4.1 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. காம்பாக்ட் பிளாக்ஷிப் ஆக அறிமுகம் செய்யப்பட்டு இருந்தாலும் கூட விவோ எஸ்50 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் ஆனது ஈர்க்கக்கூடிய பெரிய 6500mAh பேட்டரி கொண்டுள்ளது. இது 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 40W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.
குறிப்பிடத்தக்க மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது ஸ்டீரியோ டூயல் ஸ்பீக்கர்கள், ஒரு எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார், ப்ளூடூத் 5.4, வைஃபை 7 மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஆரிஜின்ஓஎஸ் 6 கஸ்டம் ஸ்கின் ஆகியவைகளை கொண்டுள்ளது.
விவோ நிறுவனம் ஆனது விவோ எஸ்50 ப்ரோ மினி ஸ்மார்ட்போனின் செயல்திறனை மட்டும் மனதில் கொண்டு, அதில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி இதை உருவாக்கி உள்ளது போல் தெரிகிறது. ஏனென்றால் இதில் கடந்த ஜெனரேஷன் மாடலை போலவே பல்துறை கேமரா அமைப்பு கிடைக்கிறது, ஆனால் இமேஜ் சென்சார்கள் மாறாமல் இருப்பது போல் தெரிகிறது.
அதாவது விவோ எஸ்50 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி பிரைமரி கேமரா (1/1.56-இன்ச், OIS, f/1.57) + 50எம்பி சோனி IMX882 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ ஷூட்டர் (3x ஆப்டிகல் ஜூம், OIS, f/2.65) மற்றும் 8எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் (110° FOV, f/2.2, ஆட்டோஃபோகஸ்) என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 50எம்பி (f/2.0) செல்பீ கேமரா உள்ளது.
என்ன விலை? சீனாவில் இது 3 கலர் ஆப்ஷன்ககளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது - கன்ஃபெஷன் ஒயிட், இன்ஸ்பிரேஷன் பர்பிள் மற்றும் டீப் ஸ்பேஸ் பிளாக். பேஸிக் 12GB + 256GB ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.47,600 க்கும், 12GB + 512GB ஆப்ஷன் சுமார் ரூ.51,500 க்கும் மற்றும் 16GB + 512GB ஆப்ஷன் சுமார் ரூ.55,300 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய அறிமுகம்? சீனாவில் விவோ எஸ்50 சீரீஸின் கீழ் அறிமுகமாகும் மாடல்கள் இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் விவோ வி70 சீரிஸ் ஸ்மார்ட்போன்களாக அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் சீனாவில் விவோ எஸ்30 ஆக அறிமுகமான ஸ்மார்ட்போன் உலகளாவிய சந்தைகளில் விவோ வி60 (Vivo V60) ஆக வந்தது. இதையே நாம் விவோ எஸ்50 சீரீஸிலும் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








