Home
Mobile

2026 ஆரம்பமே அசத்தல்.. மினி போன் உட்பட 4 புதிய VIVO போன்கள்.. என்னென்ன மாடல்கள்? என்ன விலை?

விவோ (Vivo) நிறுவனம் 2026 ஆம் ஆண்டு தொடங்கியதும்.. அடுக்கடுக்காக.. பல வகையான பட்ஜெட்டில்.. புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அப்படியாக எந்தெந்த விவோ சீரீஸின் கீழ் என்னென்ன மாடல்கள் அறிமுகமாகும்? அவைகள் என்ன விலைக்கு வரலாம்? இதோ விவரங்கள்:

விவோ நிறுவனமானது விவோ வி70 சீரீஸ் (Vivo V70 Series), விவோ எக்ஸ்200டி (Vivo X200T) மற்றும் விவோ எக்ஸ்300 எஃப்இ (Vivo X300FE) ஆகியவற்றில் பணியாற்றி வருவதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் மேற்கண்ட ஸ்மார்ட்போன்களின் ​​அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்னதாக - இந்திய வெளியீடு மற்றும் விலைகள் தொடர்பான சில முக்கிய விவரங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன.

2026 ஆரம்பமே அசத்தல்.. மினி போன் உட்பட 4 புதிய VIVO போன்கள்!

நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான அபிஷேக் யாதவின் கூற்றுப்படி, விவோ நிறுவனம் வருகிற ஜனவரி 2026 இல் மூன்று மாடல்களை அறிமுகப்படுத்தக்கூடும். அவைகள்- விவோ வி70, விவோ வி70 எலைட் மற்றும் எக்ஸ்200டி ஆகிய மாடல்கள் ஆகும். இவைகள் ஜனவரி 2026 இன் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தக்கூடும். பின்னர் விவோ எக்ஸ்300எப்இ அறிமுகப்படுத்தப்படலாம்.

விவோ வி70 மாடல் ஆனது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் சிங்கிள் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் வாங்க கிடைக்கும் என்று டிப்ஸ்டர் கூறுகிறார். விலைகளை பொறுத்தவரை, விவோ வி70 இந்தியாவில் ரூ.45,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்றும் டிப்ஸ்டர் கூறுகிறார். விவோ வி70 எலைட் ரூ.50,000 க்கு வரக்கூடும் என்றும் அவர் கூறுகிறார்.

விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன் ஆனது ரூ. 55,000 என்கிற விலை நிர்ண்யத்தை பெறலாம் என்று கூறப்படுகிறது. இறுதியாக, விவோ எக்ஸ்300 எஃப்இ மாடல் ஆனது ரூ.60,000 ஐ சுற்றிய பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் டிப்ஸ்டர் கூறுகிறார். இவைகள் எல் லாமே எதிர்பார்க்கப்படும் விலைகள் என்பதால், அறிமுகத்தின் போது விலை மாறக்கூடும் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

சீனாவில் விவோ எஸ்50 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் ஆக அறிமுகமான மாடல் விவோ வி70 சீரிஸின் இந்தியவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விவோ எஸ்50 ப்ரோ மினி டிஸ்பிளேவை பொறுத்தவரை அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே கைபிங்கர் பிரிண்ட் உடனான "ஒப்பீட்டளவில் சிறிய" 6.31-இன்ச் LTPO AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை விவோ எஸ்50 ப்ரோ மினி ஸ்மார்ட்போனை இயக்குவது குவால்காம் நிறுவனத்தின் புதிய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Gen 5) ஆகும். இந்த புதிய சிப்செட் 16ஜிபி வரையிலான LPDDR5X அல்ட்ரா ரேம் மற்றும் 512GB UFS 4.1 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை விவோ எஸ்50 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி பிரைமரி கேமரா (1/1.56-இன்ச், OIS, f/1.57) + 50எம்பி சோனி IMX882 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ ஷூட்டர் (3x ஆப்டிகல் ஜூம், OIS, f/2.65) மற்றும் 8எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் (110° FOV, f/2.2, ஆட்டோஃபோகஸ்) என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 50எம்பி (f/2.0) செல்பீ கேமரா உள்ளது.

காம்பாக்ட் பிளாக்ஷிப் ஆக அறிமுகம் செய்யப்பட்டு இருந்தாலும் கூட விவோ எஸ்50 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் ஆனது ஈர்க்கக்கூடிய, ஒரு பெரிய 6500mAh பேட்டரி கொண்டுள்ளது. இது 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 40W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

சீனாவில் இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 12GB + 256GB ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.47,600 க்கும், 12GB + 512GB ஆப்ஷன் சுமார் ரூ.51,500 க்கும் மற்றும் 16GB + 512GB ஆப்ஷன் சுமார் ரூ.55,300 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Vivo Phone 2026 Vivo V70 Vivo V70 Elite Vivo X200T Vivo X300 FE Launch Timeline Price Leaked
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X