பக்கா பட்ஜெட்.. பவர்-பேக்டு அம்சங்கள்.. 80W சார்ஜிங், ஆண்ட்ராய்டு 14 உடன் புதிய VIVO 5G போன் அறிமுகம்!
பக்காவான பட்ஜெட் விலையில், பவர்ஃபுல்லான அம்சங்களை பேக் புதிய விவோ ஸ்மார்ட்போன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோவின் ஒய்100 சீரிஸின் கீழ் வெளியாகியுள்ள இந்த புதிய 5ஜி ஸ்மார்ட்போனின் மாடல் பெயர் என்ன? விலை என்ன? அம்சங்கள் என்ன? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? விவோவின் புதிய 5ஜி ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது விவோ ஒய்100 5ஜி (Vivo Y100 5G) மாடல் தான். இது ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள (மற்ற ஒய்-சீரீஸ் ஸ்மார்ட்போன்களான) விவோ ஒய்100ஐ (Vivo Y100i) மற்றும் விவோ ஒய்100ஐ பவர் (Y100i Power) மாடல்களுடன் இணைகிறது.

என்னென்ன அம்சங்கள்? விவோ ஒய்100 5ஜி ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 1200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (Peak Brightness), டிசிஐ-பி3 கலர் கேமட் (DCI-P3 Colour Gamut) உடனான 6.6-இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் (1080 x 2400) அமோஎல்இடி டிஸ்பிளேவை (AMOLED Display) கொண்டுள்ளது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட்டுடன் (Snapdragon 4 Gen 2 Chipset) வருகிறது.
ஆண்ட்ராய்டு 14 (Android 14) அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) உடன் அனுப்பப்படும் இந்த ஸ்மார்ட்போன் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple Rear Camera Setup) உடன் வருகிறது. அதில் 50 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டர் + 8 மெகாபிக்சல் அல்ட்ராவைட் லென்ஸ் + ஒரு ஃப்ளிக்கர் சென்சார் (Flicker sensor) உள்ளது. முன்பக்கத்தில், செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான பொறுப்பை 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா பார்த்து கொள்கிறது.

விவோவின் இந்த புதிய 5ஜி ஸ்மார்ட்போன் 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. கனெக்டிவிட்டி (Connectivity) ஆப்ஷன்களை பொறுத்தவரை, கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது டூயல் சிம் (நானோ), என்எப்சி, ப்ளூடூத் 5.0, யூஎஸ்பி டாய்-சி போர்ட், ஜிபிஎஸ், க்ளோனாஸ், கலிலியோ, பிடிஎஸ் மற்றும் டூயல்-பேண்ட் வைஃபை ஆகியவற்றை கொண்டுள்ளது. கடைசியாக இது இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரையும் (In-display Finger Print Scanner) கொண்டுள்ளது.
என்ன விலை? விவோ ஒய்100 5ஜி ஸ்மார்ட்போன் மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் இந்தோனேஷியாவில் (இந்திய ரூபாய் மதிப்பின்படி) சுமார் ரூ 20,500 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் ஆப்ஷன் தோராயமாக ரூ.22,000 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விவோ ஒய்100 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு, விலை மற்றும் விற்பனை (India Launch, Price and Sale) குறித்த விவரங்கள் தற்போது வரை தெரியவில்லை. இருப்பினும் இது இந்தோனேசியாவில் விவோ நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் வழியாக ஏற்கனவே விற்பனையை தொடங்கி விட்டது.
நினைவூட்டும் வண்ணம் விவோ ஒய்100ஐ பவர் ஸ்மார்ட்போன் கடந்த டிசம்பர் 2023 இல் சீனாவில் தோராயமாக ரூ.24,000 க்கு அறிமுகமானது. இது 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஆப்ஷனின் விலையாகும். இந்தியாவில் விவோ ஒய்100 ஸ்மார்ட்போனின் பழைய வெர்ஷன் பிப்ரவரி 2023 இல் ரூ.24,999 க்கு அறிமுகமானது.

இது விவோ ஒய்100 மாடலின் சிங்கிள் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷனின் விலையாகும். இது மீடியாடெக் டைமன்சிட்டி 900 சிப்செட் (MediaTek Dimensity 900 SoC), 44W வயர்டு சார்ஜிங் ஆதரவு உடனான 4500mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








