Home
Mobile

சலுகையுடன் விற்பனைக்கு வந்த புதிய Vivo டி2 5ஜி போன்.! நம்பி வாங்கலாமா?

ஒன்பிளஸ், சாம்சங் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் 5ஜி போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யத் தொடங்கியுள்ளது விவோ நிறுவனம். சமீபத்தல் விவோ நிறுவனம் விவோ டி2 5ஜி மற்றும் விவோ டி2எக்ஸ் 5ஜி என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விவோ டி2 5ஜி எனும் ஸ்மார்ட்போன் இன்று விற்பனைக்கு வந்துள்ளது. குறிப்பாக விவோ இணையதளம் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனை வாங்க முடியும். அதாவது 6ஜிபி ரேம் மற்றும் 12ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ டி2 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,999-ஆக உள்ளது.

சலுகையுடன் விற்பனைக்கு வந்த புதிய Vivo டி2 5ஜி போன்.! நம்பி வாங்கலாமா?

அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ டி2 5ஜி மாடலின் விலை ரூ.20,999-ஆக உள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு ரூ.1500 வரை தள்ளுபடி கிடைக்கும். குறிப்பாக இந்த போனுக்கு இஎம்ஐ வசதி கூட வழங்கப்பட்டுள்ளது.

அம்சங்கள்: விவோ டி2 ஸ்மார்ட்போன் ஆனது 6.38-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 2400 × 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

புதிய விவோ டி2 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த போனில் அட்ரினோ 619 ஜிபியு வசதியும் உள்ளது. குறிப்பாக 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ போன்.

சலுகையுடன் விற்பனைக்கு வந்த புதிய Vivo டி2 5ஜி போன்.! நம்பி வாங்கலாமா?

விவோ டி2 ஸ்மார்ட்போன் 64எம்பி பிமைரி கேமரா + 2எம்பி bokeh கேமரா சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 16எம்பி செல்பி கேமரா, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவு, 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 4500 எம்ஏஎச் பேட்டரி, 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

நிறைகள் மற்றும் குறைகள்: இந்த விவோ டி2 ஸ்மார்ட்போனில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு உள்ளது,இதற்குப் பதிலாக 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் வெளிவந்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும். அதேபோல் இன்னும் மேம்பட்ட செயல்திறன் கொண்ட சிப்செட் உடன் இந்த போன் வெளிவந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அதாவது பல முன்னணி நிறுவனங்கள் ரூ.18,000 பட்ஜெட்டில் தரமான சிப்செட் கொண்ட போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்த போனில் 2எம்பி bokeh கேமராவுக்கு பதிலாக ஒரு அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டிருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும். அதாவது கேமராவிலும் விவோ நிறுவனம் சொதப்பி உள்ளது.

சலுகையுடன் விற்பனைக்கு வந்த புதிய Vivo டி2 5ஜி போன்.! நம்பி வாங்கலாமா?

மற்றபடி பெரிய டிஸ்பிளே, பாஸ்ட் சார்ஜிங் வசதி, நீண்ட நேரம் பேக்கப் தரும் பேட்டரி, 5ஜி ஆதரவு உள்ளிட்ட சில முக்கியமான அம்சங்களுடன் இந்த விவோ டி2 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் விரைவில் இதன் விவோ டி2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Vivo 5G phone to go on first sale in India check Vivo T2 5G pros and cons before buying it: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X