ஆண்ட்ராய்டில் புது வைரஸ் வந்தாச்சுங்க....

Written By:

இன்று உலகளவில் ஆண்ட்ராய்டு போனின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது அதற்கேற்ப பல வைரஸ்கள் ஆண்டிராய்டில் வந்த வண்ணம் தான் உள்ளன.

ஆண்டிராய்ட் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களை அச்சுறுத்த புதிதாக ஒரு வைரஸ் வந்துள்ளது. Obad.a Trojan என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் போனில் உள்ள கான்டாக்ட் டைரக்டிரி மூலம் அனைத்து கான்டாக்டுகளுக்கும் பரவ கூடியது.

மேலும், இந்த வைரஸ் ஒரு சாதாரன எஸ்எம்எஸ் மூலம் போன்களில் பரவி விடும் என்று காஸ்பெர்ஸ்கி லேப் ஆய்வகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மொபைலுக்கு பழைய படித்த மெசேஜ்களை ரீலோட் செய்ய லிங்குடன் மெசேஜ் வரும் அந்த லிங்கை நீங்கள் செய்தால் போதும் உங்களுக்கே தெரியாமல் உங்கள் மொபைலுக்கு வைரஸ் டவுன்லோட் ஆகி விடும்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

ஆண்ட்ராய்டில் புது வைரஸ் வந்தாச்சுங்க....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

எஸ்எம்எஸ் மூலம் மொபைலுக்கு பரவும் வைரஸ்!!! போன்களில் வைரஸ் இருப்பது உங்களுக்கே தெரியாது. அது போனில் உள்ள அனைத்து கான்டாக்டுகளுக்கும் இதை பரப்ப தொடங்கி விடும்.

விளம்பர மெசேஜ்கள் போன்று வரும் எஸ்எம்எஸ் மூலமும் ஆன்டிராய்ட் மொபைல்களில் வைரஸ் பரவுமாம். Obad.a Trojan வைரஸ் ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ், உஸ்பேக்கிஸ்தான் மற்றும் கஜகிஸ்தான் ஆகிய நாடுகளில் தான் அதிகமாக பரவி உள்ளது.

ஆனால் இது உலகில் உள்ள மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயம் அதிகம் உள்ளது. அதனால் புதிதாக உங்கள் மொபைலுக்கு வெப் லிங் உடன் எதாவது எஸ்எம்எஸ் வந்தால் அதை முடிந்த வரையில் தவிர்த்திடுங்கள் அந்த வெப் லிங்கை கிளிக் செய்யாதீர்கள்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot