Home
Mobile

மறுபடியும் சூடுபிடிக்கும் SALE.. ஒயிட் அண்ட் ஒயிட்ல.. இந்தியாவுல களமிறங்கிய Motorola போன்.. என்ன மாடல்?

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில், மோட்டோரோலா நிறுவனம் அதன் எட்ஜ் சீரிஸின் கீழ்.. முரட்டுத்தனமான அம்சங்களை கொண்ட ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருந்தது. அது மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 5ஜி (Motorola Edge 50 Pro 5G) மாடல் ஆகும். அறிமுகமான நாளில் இருந்து ரூ.35,000 க்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள் என்கிற பட்டியலில் நீடித்து வரும் அளவிற்கு.. இது இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று.. நல்ல முறையில் விற்பனையாகியும் வருகிறது.

இதற்கிடையில், மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனையை இன்னும் அதிகரிக்கும் நோக்கத்தின் கீழ் புதிய கலர் ஆப்ஷன் ஒன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதலில் இது பிளாக் பியூட்டி, லக்ஸ் லாவெண்டர் மற்றும் மூன்லைட் பேர்ல் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் தான் அறிமுகமானது. தற்போது இந்த பட்டியலில் வெண்ணிலா கிரீம் என்கிற புதிய கலர் சேர்க்கப்பட்டுள்ளது.

ஒயிட் அண்ட் ஒயிட்ல.. இந்தியாவுல களமிறங்கிய Motorola போன்!

நிறத்தில் உள்ள வேறுபாட்டை தவிர, வெண்ணிலா கிரீம் மற்றும் பிற கலர் ஆப்ஷன்களுக்கும் இடையே வேறு எந்த வேறுபாடும் இல்லை. அதாவது அனைத்துமே ஒரே மாதிரியான அம்சங்களைத்தான் பேக் செய்கின்றன. சுவாரசியமாக மற்ற 3 கலர் ஆப்ஷன்களில் கிடைப்பதை போலவே வெண்ணிலா கிரீம் வேரியண்ட்டும் 125W சார்ஜர் மற்றும் 68W சார்ஜர் ஆகிய இரண்டு வகை சார்ஜர்களுடனும் வெவ்வேறு விலைகளில் வாங்க கிடைக்கிறது.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, 68W சார்ஜர் உடன் வரும் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.31,999 க்கும், 125W சார்ஜருடன் வரும் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.35,999 க்கும் வாங்க கிடைக்கிறது. இவ்விரு வேரியண்ட்களுமே பிளிப்கார்ட் வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கிறது.

இதை முரட்டுத்தனமான ஸ்மார்ட்போன் என்று கூற காரணம், இது பேக் செய்யும் அம்சங்கள் தான். மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான ஹலோ யுஐ உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு 3 முக்கிய ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்று மோட்டோரோலா நிறுவனம் வாக்குறுதி அளித்துள்ளது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு உடனான 6.7-இன்ச் 1.5K பிஎல்ஓடி கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ப்ராசஸரை பொறுத்தவரை, குவால்காமின் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

இந்த சிப்செட் 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் ஓஐஎஸ் (OIS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவுடன் 50எம்பி மெயின் கேமரா + 13எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார் + 10எம்பி டெலிஃபோட்டோ ஷூட்டர் உள்ளன.

முன்பக்கத்தில், குவாட்-பிக்சல் தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோஃபோகஸ் ஆதரவு உடனான 50எம்பி செல்பீ கேமரா உள்ளது. தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி68-ரேடிங்கையும் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 125W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் டர்போ சார்ஜிங்கிற்கான ஆதரவு உடனான 4,500எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது. குறிப்பிடத்தக்க வேறுபாடாக 12ஜிபி ரேம் ஆப்ஷன் உடன் 125W சார்ஜர் வரும்; 8ஜிபி ரேம் ஆப்ஷன் உடன் 68W சார்ஜர் வரும்.

மோட்டோரோலா நிறுவனத்தை பற்றிய மற்ற அப்டேட்களை பொறுத்தவரை, இந்நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆன மோட்டோ ஜி85 5ஜி (Moto G85 5G) மாடலானது வருகிற ஜூலை 10 ஆம் தேதியன்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது ரூ.25,000-க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Vanilla Cream Color Variant of Motorola Edge 50 Pro 5G Launched in India Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X