சரியான நேரத்தில் புதிய அம்சத்தை கொண்டு வரும் கூகுள் மேப்ஸ்.!

|

கூகுள் மேப்ஸ் தளத்தில் தொடர்ந்து புதிய புதிய அம்சங்கள் சேர்ந்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்த தளத்தில் வரும் ஒவ்வொரு அம்சமும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.

ரப்பினரிடம்

அதேபோல் ஓட்டுநர்கள் முதல் சாலை பாதசாரிகள் வரை இந்த கூகுள் மேப்ஸ் வசதியை அதிகம் பயன்படுத்துகின்றனர், காரணம் முன்பின் தெரியாத இடத்துக்கு முகவரியை மட்டும் வைத்து கொண்டு செல்வோருக்கு பேருதவி செய்கிறது இந்த கூகுள் மேப்ஸ்.

இந்நிலையில் கூகுள் நிறுவனம் சுற்றுச்சூழலை காக்க ஓர் புதிய திட்டத்தை தற்சமயம் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் பலதரப்பினரிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

 சாட்டிலைட் தொழில்நுட்பம்

சாட்டிலைட் தொழில்நுட்பம்

இந்த கூகுள் மேப்ஸ் உதவியுடன் உலகின் எந்த மூலையிலும் வாகனங்கள் பயணிக்க வசதி செய்து தரப்படும். அதிலும் சாட்டிலைட்தொழில்நுட்பம் கொண்டு இயங்குவதால் இந்த கூகுள் மேப்ஸ் வசதியை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர்.

ஒன்பிளஸ் 9 ப்ரோ இன்று விற்பனை.. எப்படி? எங்கே வாங்கலாம்? முதல் விற்பனை இவர்களுக்கு மட்டுமே..ஒன்பிளஸ் 9 ப்ரோ இன்று விற்பனை.. எப்படி? எங்கே வாங்கலாம்? முதல் விற்பனை இவர்களுக்கு மட்டுமே..

 பருவநிலை மாற்றம்

பருவநிலை மாற்றம்

இப்போது உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் காரணமாக துருவப் பகுதிகளில் பனிப்பாறை உருகுதல், கரியமில வாயுவின் அதிகரிப்பு போன்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இதை தவிர்க்க பல்வேறு நாடுகளும் புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகின்றன. அதிலும் உலக நாடுகள் பல பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தை இட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பாரிஸ் பருவநிலை

அண்மையில் புகழ் பெற்ற பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் வல்லரசு நாடுகள் பல கையெழுத்திட்டுள்ளன. தனியார் நிறுவனங்களும் இயற்கை வளத்தை காக்க பல புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகின்றன.

சாம்சங் கேலக்ஸி ஏ51, கேலக்ஸி ஏ21 எஸ் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: இதோ!சாம்சங் கேலக்ஸி ஏ51, கேலக்ஸி ஏ21 எஸ் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: இதோ!

கூகுள் நிறுவனமும் பருவநிலையை

அதேபோல் கூகுள் நிறுவனமும் பருவநிலையை பாதுகாக்க கூகுள் மேப் செயலியில் ஒரு புதிய அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது. அதாவது கூகுள் மேப்ஸ் வசதியில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வழி கேட்டால் இரண்டு அல்லது மூன்று வழிகளை காண்பிக்கும். பின்பு இந்த வழிகளில் எது சிறந்தது, எந்த வழியில் வேகமாக செல்ல முடியும் என்பதை கூகுள் மேப்ஸ் தேர்வு செய்து அதனை நமக்கு சிபாரிசு செய்யும்.

பிளக் பாயிண்ட் ஆஃப்: இனி ரயிலில் இரவு நேரத்தில் செல்போன் சார்ஜ் செய்ய முடியாது!பிளக் பாயிண்ட் ஆஃப்: இனி ரயிலில் இரவு நேரத்தில் செல்போன் சார்ஜ் செய்ய முடியாது!

கூகுள் மேப் செயலியில் ப்

தற்போது பருவநிலை மாற்றத்தை தவிர்க்க அதிக வாகன புகை மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு இல்லாத வழியை காண்பிக்க கூகுள் மேப் செயலியில் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளது என கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டள்ளது.

சீர்கேடு இல்லாத வழியாக

எனவே சுற்றுச்சூழல் சீர்கேடு இல்லாத வழியாக பெரும்பாலான வாகனங்கள் பயணித்தால் பல இடங்களில் அதிக புகை வெளியீட்டை தவிர்க்க முடியும். பின்பு ஓரிடத்தில் அதிக வாகனங்கள் தேங்குவதால் கார்பன் அளவு அதிகமாகிறது. இதனை தடுப்பதற்கு வேண்டியே இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

News Source: aviationanalysis.net

Best Mobiles in India

English summary
New update on Google Map to protect the environment: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X