சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ 5 ஜி ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.! எதற்கு தெரியுமா?

|

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்20 எஃப்இ 5 ஜி ஸ்மார்ட்போனுக்கு புதிய மென்பொருள் அப்டேட்-ஐ வெளயிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த அப்டேட் ஃபார்ம்வேர் எண் G781BXXU2CUD1 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ 5 ஜி ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.!

குறிப்பாக இந்த அப்டேட் ஆனது சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ 5 ஜி ஸ்மார்ட்போனின் டச் ஸ்கிரீன் வசதியை மேம்படுத்துவதாக கூறப்படுகிறது. அதாவது இந்த மாத துவகத்தில் இந்த சாதனத்தை பயன்படுத்து பயனர்கள் டச் ஸ்கிரீன் வசதியில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே இதை சரிசெய்ய தான் இந்த புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய சாதனம் சமீபத்திய ஆண்ட்ராய்டு பாதுகாப்பு பேட்சைப் பெற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 5 ஜி ஸ்மார்ட்போன் கிளவுட் நேவி, கிளவுட் மிண்ட் மற்றும் கிளவுட் லாவெண்டர் என மூன்று வண்ணங்களில் வருகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ 5 ஜி ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.!

சிப்செட்டில் உள்ள வேறுபாட்டைத் தவிர, 5 ஜி பதிப்பு மற்றும் 4 ஜி பதிப்பு ஆகிய இரண்டு சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ மாடல்களுக்கும் பெரியளவில் வித்தியாசம் என்று எதுவுமில்லை. இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் ஒத்த விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களுடன் வருகிறது.

கேலக்ஸி எஸ்20 எஃப்இ 5ஜி குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 செயலி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 4500 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. இது வயர்லெஸ் பவர் ஷேர் மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் 2.0 ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 25W சூப்பர்-ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இது மேம்பட்ட நாக்ஸ் பாதுகாப்புடன் எண்டு-தி-எண்டு என்க்ரிப்ஷன் வன்பொருள் மற்றும் மென்பொருள் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 5 ஜி ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 1 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவுடன் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் அமோலட் இன்பினிட்டி-ஓ டிஸ்பிளேவுடன், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் மற்றும் 240 ஹெர்ட்ஸ் டச் ரிப்போர்ட் வீதத்துடன் வருகிறது. டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. இதில் 30 எக்ஸ் ஸ்பேஸ் ஜூம் இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ 5 ஜி ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.!

இது 12 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கிள் சென்சார், 12 மெகா பிக்சல் வைடு ஆங்கிள் சென்சார் மற்றும் 8 மெகா பிக்சல் டெலிபோட்டோ லென்ஸ் ஆகியவற்றுடன் வருகிறது. இதில் 32 மெகா பிக்சல் கொண்ட செல்பி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 5 ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 55,999 ஆகும்.

Best Mobiles in India

English summary
New update for Samsung Galaxy S20 FE 5G smartphone!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X