Home
Mobile

சூப்பரான கேமரா UPDATE.. இந்த லேட்டஸ்ட் Nothing போன்களை வாங்கி இருக்கீங்களா? அப்போ இது உங்களுக்கு தான்!

நத்திங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களான நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a) மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro) ஆகிய 2 மாடல்களுக்கும் புதிய அப்டேட் வந்துள்ளது. இது குறிப்பிட்ட 2 மாடல்களுக்கும் புதிய அம்சங்கள் மற்றும் சிஸ்டம் மேம்பாடுகளை சேர்க்கிறது. அது குறித்த விவரங்கள் இதோ:

முதல் மற்றும் முக்கியமாக - நத்திங் போன் 3ஏ மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ மாடல்களுக்கு வந்துள்ள இந்த அப்டேட் டெலிஃபோட்டோ மற்றும் பெரிஸ்கோப் கேமராக்களுக்கான 4கே வீடியோ ரெக்கார்ட் ஆதரவை சேர்க்கிறது. இது பயனர்களுக்கு ஷார்ப் ஆன வீடியோ தரத்தை வழங்குகிறது. மேலும் இந்த அப்டேட் வழியாக ஒரு புதிய பிரைவசி ஸ்பேஸ் அம்சமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சூப்பரான கேமரா UPDATE.. இந்த லேட்டஸ்ட் Nothing போன்களுக்கு!

செக்யூர் ஆன ஏரியாவை விரைவாக அணுக பயனர்கள் இப்போது ஆப் டிராயரில் வலதுபுறமாக ஸ்வைப் செய்யலாம். மேலும் ஆப் லாக்கர் மற்றும் பிரைவசி ஸ்பேஸுக்கு தனியாக பிரைவசி பாஸ்வேர்ட் அமைக்கும் விருப்பமும் சேர்க்கப்பட்டுள்ளது.. இந்த அப்டேட் ஹாட்ஸ்பாட் மேனேஜரையும் சேர்க்கிறது, இது போனின் ஹாட்ஸ்பாட்டுடன் இணைக்கப்பட்ட டிவைஸ்களை மேனேஜ் செய்வதை எளிதாக்குகிறது.

குறிப்பிடத்தக்க மற்ற கேமரா மேம்பாடுகளில் - சிறந்த முக விவரங்கள் மற்றும் இயற்கையான வண்ணங்களுடன் தெளிவான செல்பீக்கள் கிடைக்கிறது. மேலும் உயர் தெளிவுத்திறன் கொண்ட 50எம்பி புகைப்படங்களில் இப்போது பில்டர்களை பயன்படுத்தலாம். இந்த அப்டேட் ப்ரைட்னஸ்-ஐயும் மேம்படுத்துகிறது மற்றும் குறைந்த வெளிச்சத்தில் டெலிஃபோட்டோ கேமராவை பயன்படுத்தும் போது ஃப்ளிக்கரை குறைக்கிறது.

மேற்கண்ட புதிய அம்சங்கள் மற்றும் முக்கிய மேம்பாடுகளை உள்ளடக்கிய அப்டேட் உடன் சேர்த்து, இது ஏப்ரல் மாதத்திற்கான ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்சையும் கொண்டு வருகிறது. இந்த அப்டேட் ஆனது ஒவ்வொரு கட்டங்களாக நடைபெற்று வருகிறது, விரைவில் இன்னும் அதிகமான நத்திங் போன் 3ஏ மற்றும் நத்திங் போன் 2ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் பயனர்களைச் சென்றடையும்.

நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- பேக் பேனலில் கிளிஃப் லைட்டிங் செட்டப்
- 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.77 இன்ச் AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக நத்திங் ஓஎஸ் 3.1

- ஹாரிசாண்டல் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- புதிய 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார்
- 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 50W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5,000mAh பேட்டரி

நத்திங் போன் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- பேக் பேனலில் கிளிஃப் லைட்டிங் செட்டப்
- 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.77 இன்ச் AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக நத்திங் ஓஎஸ் 3.1

- சர்க்குலர் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார்
- 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 50W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 7.5W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு
- 5,000mAh பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
New Update Brings camera upgrade's including 4K Telephoto Video to Nothing Phone 3a Series
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X